முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எகிப்தின் முன்னாள் அதிபருக்கு முபாரக்கிற்கு ஆயுள்

ஞாயிற்றுக்கிழமை, 3 ஜூன் 2012      உலகம்
Image Unavailable

ஹெய்ரோ,ஜூன்.3 - தனது எதிர்ப்பாளர்கள் 846 பேரை படுகொலை செய்தது தொடர்பான வழக்கில் எகிப்தின் முன்னாள் அதிபர் ஹோசினி முபாரக்கிற்கு ஆயுள் தண்டனை வழங்கி அந்த நாட்டு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது. எகிப்தில் சுமார் 30 ஆண்டுகளாக அதிபராக இருந்தவர் ஹோசினி முபாரக். இவரது ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளிர்ச்சியில் ஈடுபட்டனர். கிளிர்ச்சியில் ஈடுபட்டவர்களை ராணுவத்தை கொண்டு ஒடுக்க முற்பட்டார். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் கிளர்ச்சியாளர்கள் 846 பேரை படுகொலை செய்ததாக முபாரக் மீது குற்றஞ்சாட்டப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் முபாரக் அரசில் அமைச்சர் ஒருவர் மற்றும் அவரது மகன் உட்பட பாதுகாவலர்கள் 6 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. தீர்ப்பு கூறியபோது ஏராளமானோர் நீதிமன்றம் முன்பு கூடியிருந்தனர். 846 பேரை படுகொலை செய்த வழக்கில் முபாரக் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோர்களுக்கு ஆயுள்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார். முபாரக்கின் மகன் மற்றும் பாதுகாவலர்கள் 5 பேர்கள் குற்றவாளிகள் அல்ல என்று நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதற்கு நீதிமன்றத்தில் கூடியிருந்த மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்