முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.ஜி.ஆர் திரைப்பட நிறுவனத்தில் சேர்க்கை ஆரம்பம்

ஞாயிற்றுக்கிழமை, 3 ஜூன் 2012      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஜூன்.3 - எம்.ஜி.ஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் மேல்நிலைக் கல்வியில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு மற்றும் ஒலிப்பொறியியல், படம் பதனிடுதல் படத்தொகுப்பு ஆகிய நான்கு பிரிவுகளிலும், பட்டப் படிப்பில், தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் இயக்குதல் பிரிவிலும், இக்கல்லூரியில் மூன்றாண்டு கால  பட்டயப் படிப்பிற்காக 2012-2013 ஆம் கல்வியாண்டில் முதலாம் ஆண்டு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேற்குறிப்பிட்ட பாடப் பிரிவுகளில் சேர்ந்து, கலைத்துறையில் தங்களின் கலை ஆர்வத்தை வளர்த்துக் கொள்ள விரும்பும் மாணவ, மாணவியர் இதற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் தொகுப்பேட்டை  Principal, MGR., Government Film and Television Institute, Tharamani, Chennai-600 113, எனும் பெயரில் ரூ.200-க்கான வங்கி வரைவோலையையும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் சாதி சான்றின் ஜெராக்ஸ் நகலுடன் ரூ.60-க்கான வங்கி வரைவோலையை தேசீயமயமாக்கப்பட்ட வங்கியில் சென்னையில் மாற்றத்தக்க வகையில் எடுத்து, சென்னையில் வசிப்பவர் எனில் ரூ.30-க்கான அஞ்சல் வில்லை ஒட்டிய 2 கவர்கள் (ஒரு கவர் (30 cm x  25 cm)-ம் மற்றொரு கவர் (26 cm x 12 cm) ஒட்டப்பட்ட சுயவிலாசமிட்ட உறையுடன் மேற்கண்ட முகவரிக்கு அனுப்பி பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்படிவம் தகவல் தொகுப்பேட்டினை www.tn.gov.in  எனும் இணையதளம் மூலம் பெற்று பூர்த்தி செய்து மேற்குறிப்பிட்டுள்ள முகவரிக்கு ரூ.200-க்கும், 60-க்கும் வங்கி வரைவோலைகளை இணைத்து அனுப்பலாம் எதிர்வரும் 15.6.12 மாலை 5.00 மணிவரை விண்ணப்பிக்கலாம் என எம்.ஜி.ஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன முதல்வர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்