முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிருங்கேரி ஸ்ரீஸ்ரீ பாரதீ தீர்த்த சுவாமிகள் பழனிக்கு இன்றுவருகை

திங்கட்கிழமை, 4 ஜூன் 2012      தமிழகம்
Image Unavailable

 

பழனி, ஜூன்.- 4 - சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம் ஸ்ரீஸ்ரீ பாரதீ தீர்த்த சுவாமிகள் பழனிக்கு இன்று மாலை 6 மணிக்கு வருகைபுரிகிறார்.இதனையொட்டி அவருக்கு கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

பழனிக்கு இன்று மாலை 6 மணிக்கு சிருங்கேரி ஸ்ரீ சாரதாபீடம் ஜகத்குரு சங்கராசார்யார் ஸ்ரீஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாசன்னிதானம் வருகை புரிகிறார். அவருக்கு பழனி-திண்டுக்கல் ரோட்டில் ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க் முன்பு கும்ப மரியாதையுடன் கூடிய சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதற்கு தொழில் அதிபர் என்.அரிகரமுத்து தலைமை வகிக்கிறார்.இதில் கே.எஸ்.என்.வேணுகோபாலு எம்.எல்.ஏ., மற்றும் ஸ்ரீபாத சேவா சமிதியைதச் சேர்ந்த ராம்ஜி, பாலசுப்பிரமணிய சிவாச்சாரியார், டாக்டர் சங்கர்ராமன், வைத்தியநாத சாஸ்திரிகள் ரமேஷ்குமார் சர்மா பங்கேற்கின்றனர். பின்பு பழனி சித்தனாதன் அங்காள பரமேஸ்வரி திருமண மண்டபத்தில் இன்று இரவு 8.30 மணிக்கு மஹாசுவாமிகள் ஸ்ரீசாரதாசந்திர மவுலீஸ்வர பூஜை நடைபெறுகிறது. பின்பு காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை மஹாசுவாமிகள் தரிசனம், தீர்த்தப்பிரசாதம், பாத பூஜைகள், பிட்ஷாவந்தனம் நடபெறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago