முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பத்தாம் வகுப்பு தேர்வுமுடிவு இன்று பிற்பகல் வெளிவருகிறது

திங்கட்கிழமை, 4 ஜூன் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை,ஜூன்.- 4 - பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு வெளியாகிறது. மாணவர்களுக்கு வருகின்ற 21-ம் தேதி மதிப்பெண் சான்றிதழ் அந்தந்த பள்ளிகளில் வழங்கப்படும் என்று பள்ளி தேர்வுத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் 4-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி முடிந்தது. தமிழகம் முழுவதும் 6 லட்சத்து 22 ஆயிரத்து 377 மாணவர்கள், 5 லட்சத்து 32 ஆயிரத்து 810 மாணவிகள் உள்பட மொத்தம் 11 லட்சத்து 55 ஆயிரத்து 187 பேர் எழுதினர். கடந்த கல்வி ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட சமச்சீர் கல்வி முறையின் கீழ் 10-ம் வகுப்பு மாணவர்கள் முதல் முறையாக பொதுத்தேர்வு எழுதினர். ஏற்கனவே இருந்த 4 கல்வி வாரியங்கள் நீக்கப்பட்டு பொதுக்கல்வி வாரியம் உருவாக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இந்தாண்டு 10-ம் வகுப்பு மாணவர்கள் தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி என்ற 2 பிரிவுகளின் கீழ் பட்டியலிடப்பட்டு இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது. வழக்கமாக தேர்வு முடிவுகள் காலையில் வெளியாகும். இந்தாண்டு முதல் முறையாக பிற்பகலில் முடிவு வெளியாகிறது. பிளஸ் 2 வகுப்பு போல,10-ம் வகுப்பு மாணவர்களுக்கும் இந்தாண்டு முதல் போட்டோவுடன் கூடிய மதிப்பெண் பட்டியல் வழங்கப்படுகிறது. மதிப்பெண் சான்றிதழ்கள் வரும் 21-ம் தேதி அந்தந்த பள்ளியில் வழங்கப்படும். தனித்தேர்வுகள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்களில் மதிப்பெண் சான்றுதழ் பெற்றுக்கொள்ளலாம். தேர்வு எழுதிய அனைத்து பாடங்களுக்கும் மதிப்பெண் மறுகூட்டல் செய்ய விரும்புவோர் விண்னப்பங்களை 5-ம் தேதி முதல் 7-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்வு துறை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்