முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங்.சார்பாக ஜனாதிபதி வேட்பாளரை தேர்வுசெய்ய சோனியாவுக்கு அதிகாரம்

செவ்வாய்க்கிழமை, 5 ஜூன் 2012      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,ஜூன்.- 5 - காங்கிரஸ் சார்பாக ஜனாதிபதி பதவிக்கு வேட்பாளரை தேர்வு செய்ய சோனியா காந்திக்கு கட்சியின் காரிய கமிட்டி அதிகாரம் அளித்துள்ளது. ஜனாதிபதியாக இருக்கும் பிரதீபா பாட்டீலின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதத்துடன் முடிவடைகிறது. அவருக்கு பதிலாக புதிய ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஜனாதிபதி பதவிக்கு கடும் போட்டி ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. லோக்சபை முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மாவை ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளராக நிறுத்த முதல்வர் ஜெயலலிதாவும் ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதனையொட்டி அவருக்கு ஆதரவு பெருகும் சூழ்நிலை உருவாகி உள்ளது. மேலும் ஜனாதிபதி பதவிக்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், தற்போது துணை ஜனாதிபதியாக இருக்கும் அன்சாரி, மத்திய நிதி அமைச்சராக இருக்கும் பிரணாப் முகர்ஜி, லோக்சபை சபாநாயகர் மீரா குமார் ஆகியோர்களின் பெயர்களும் அடிபடுகிறது.
இந்தநிலையில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நேற்று கட்சியின் தலைவர் சோனியா காந்தி தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. அப்போது ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட காங்கிரஸ் சார்பாக வேட்பாளரை தேர்வு செய்யும் அதிகாரம் அளிக்கப்பட்டது. இதற்கான தீர்மானத்தை முன்னதாக மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கொண்டுவந்தார். இதில் இன்னொரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் காங்கிரஸ் சார்பாக ஜனாதிபதி வேட்பாளராக பிரணாப் முகர்ஜி நிறுத்தப்படலாம் என்று தெரிகிறது.  இந்திரா காந்தி அமைச்சரவையில் பிரணாப் முகர்ஜி இணை நிதி அமைச்சராக இருந்தார். அப்போது இந்திரா காந்தி சுட்டுக்கொலை செய்யப்பட்டபோது இரண்டாவது இடத்தில் நான் தான் இருக்கிறேன். என்னை பிரதமராக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தவர்தான் பிரணாப் முகர்ஜி. அதனால் அவருக்கு ஜனாதிபதியாக அனைத்து தகுதிகளும் இருந்தும் அவரை ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்ய சோனியா காந்தி தயக்கம் காட்டுவதாக தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago