முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெட்ரோல் விலை உயர்வை கசப்பு மருந்தாக ஏற்றுக் கொள்ளவேண்டும்

செவ்வாய்க்கிழமை, 5 ஜூன் 2012      இந்தியா
Image Unavailable

 

காரைக்குடி, ஜூன். - 5- பெட்ரோல் விலை உயர்வை ஏற்றுக் கொள்ள முடியாது. அதே சமயம் தவிர்க்கவும் முடியாது. இதை ஒரு கசப்பு மருந்தாக பொதுமக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறியுள்ளார்.  காரைக்குடியில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய அவர் மேலும் கூறியதாவது, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 120 அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. கடந்த பா.ஜ.க. ஆட்சியின் போது இந்த விலை 20 அமெரிக்க டாலராக இருந்தது. இந்த அளவுக்கு விலை உயர்ந்துள்ளதாலேயே பெட்ரோல் விலையை உயர்த்த வேண்டியதாகி விட்டது. மத்திய அரசு மானியமாக மண்ணெண்ணெய் லிட்டருக்கு ரூ. 31.49, டீசல் லிட்டருக்கு ரூ. 17.54, சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ. 480 வழங்குகிறது. ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் ஏற்பட்டுள்ள பொருளாதார தேக்கம் நம்மை பாதித்துள்ளது. வெளிநாட்டு முதலீடுகள் குறைந்துள்ளன. அன்னிய செலாவணியும் திருப்திகரமாக இல்லை. ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி பா.ஜ.க. ஆட்சியில் 5.3 சதவீதம் மட்டுமே இருந்தது. காங்கிரஸ் ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளாக சராசரியாக 8.5 சதவீத வளர்ச்சியும் உள்ளது என்றார். 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago