முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று கட்காரியை சந்தித்து ஆதரவு கேட்கிறார் ராம்தேவ்

செவ்வாய்க்கிழமை, 5 ஜூன் 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஜுன் - 5 - பா.ஜ.க. தலைவர் நிதின் கட்காரியை யோகா குரு பாபா ராம்தேவ் இன்று சந்தித்து பேச இருக்கிறார். அப்போது ஊழலுக்கு எதிராகவும், கறுப்பு பணத்திற்கு எதிராகவும் தான் நடத்திவரும் போராட்டத்திற்கு பா.ஜ.க.வின் ஆதரவை ராம்தேவ் கேட்பார் என்று தெரிகிறது. ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதாவை கொண்டுவர வேண்டடும் என்றும், வெளிநாடுகளில் பதுக்கிவைக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தை இந்தியாவுக்கு மீட்டுக் கொண்டுவர வேண்டும் என்றும் கோரி ஏற்கனவே தனித்தனியாக உண்ணாவிரத போராட்டங்களை நடத்திவந்த அன்னா ஹசாரேவும், பாரா ராம்தேவும் நேற்று முன்தினம் டெல்லியில் கூட்டாக ஒரு நாள் அடையாள உண்ணாவிரதத்தை மேற்கொண்டனர். இந்த நிலையில் பா.ஜ.க. தலைவர் நிதின் கட்காரியை, பாபா ராம்தேவ் இன்று சந்தித்து பேச இருக்கிறார். அப்போது வெளிநாடுகளில் இந்தியர்கள் மறைத்து வைத்து  உள்ள கறுப்புப்பணத்தை இந்தியாவுக்கு மீட்டுக் கொண்டுவர வேண்டும் என்பதற்காகவும், ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதாவை கொண்டுவர வேண்டும் என்பதற்காகவும் தான் நடத்திவரும் பிரச்சாரத்திற்கு பா.ஜ.க. ஆதரவு தர வேண்டும் என்ற வேண்டுகோள் கடிதம் ஒன்றை கட்காரியிடம் ராம்தேவ் வழங்குவார் என்று ராம்தேவின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறினார். ஊழலுக்கு எதிரான கறுப்புப் பணத்திற்கு எதிரான தங்களது இயக்கத்திற்கு ஆதரவு தரும்படி பல்வேறு அரசியல் கட்சிகளின் ஆதரவை நாட இருப்பதாக பாபா ராம்தேவ் ஜந்தர் மந்தர் உண்ணாவிரதத்தின் போது கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்