முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏற்றுமதியை அதிகரிக்க 7 அம்ச திட்டம்: மத்தியஅரசு அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 5 ஜூன் 2012      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,ஜூன்.- 6 - நாட்டின் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் வட்டி மான்யம் நீட்டிப்பு உள்பட பல்வேறு சலுகைகள் அடங்கிய 7 அம்ச திட்டம் ஒன்றை மத்திய அரசு அறிவித்துள்ளது.  உலக அளவில் பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளது. அதோடு மட்டுமல்லாது அத்தியாவசிய பொருள்களின் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது இந்தியாவை அதிக அளவில் பாதித்துள்ளது. இதிலிருந்து மீள வேண்டுமானால் நாட்டின் ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும். இதை கருத்தில் கொண்டு நாட்டின் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் 7 அம்ச திட்டம் ஒன்றை மத்திய அரசு அறிவித்துள்ளது. வட்டி மான்யம் அளிப்பதை ஓராண்டு காலத்திற்கு அதாவது வரும் 2013-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று வெளிநாட்டு வர்த்தக கொள்கையை மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். அதோடு மட்டுமல்லாது இந்த சலுகை தொழிலாளர்கள் அதிகம் வேலை செய்யும் பொம்மைகள்,விளையாட்டு கருவிகள், பதப்படுத்தப்பட்ட விவசாய பொருட்கள், ஆயத்த ஆடைகள் ஆகியவைகளின் ஏற்றுமதிக்கும் விரிவாக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் ஆனந்த் சர்மா தெரிவித்தார். வேலைவாய்ப்பு அதிகம் உள்ள தொழில்கள்களுக்கும் இந்த சலுகை அளிக்கப்படும். நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஏற்றுமதி 20 சதவீதம் அதிகரிக்கும் என்று அமைச்சர் ஆனந்த் சர்மா நம்பிக்கை தெரிவித்தார். கடந்த 2011-12-ம் ஆண்டில் நாட்டின் ஏற்றுமதி 21 சதவீதம் அதாவது 303 பில்லியன் டாலர் அளவுக்கு அதிகரித்தது. கைத்தறி, கைவினைப்பொருள்கள், கம்பளம் ஆகிய தொழில்களுக்கும் வட்டி மான்ய சலுகை அளிக்கப்படும். ஏற்றுமதிக்கான வழிமுறைகளையும் நடவடிக்கைகளையும் எளிதாக்கப்படும் என்றும் அமைச்சர் ஆனந்த் சர்மா மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்