முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. அசோக் ஆனந்தன் கோர்ட்டில்ஆஜர்

புதன்கிழமை, 6 ஜூன் 2012      இந்தியா
Image Unavailable

 

புதுச்சேரி, ஜூன்.- 6 - சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்காக புதுவை நீதிமன்றத்தில் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. அசோக் ஆனந்தன் ஆஜர் ஆனார். 1997-ம் ஆண்டு பாசிக் பொதுமேலாளராகவும், தலைமை பொறியாளராகவும் ஆனந்தன் பணியாற்றினார். அப்போது அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சிபிஜக்கு புகார் சென்றது. அதன் பேரில் ஆனந்தன், அவரது மனைவி விஜயலட்சுமி மற்றும் மகன் ஆசோக் ஆனந்தன் ஆகியோர் மீது கடந்த 6.9.2006-ல் சிபிஜ வழக்குப்பதிவு செய்தது. 11.1.2008 அன்று புதுவை மாவட்ட முன்மை அமர்வு நீதிமன்றத்தில் சிபிஜ குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது. இது தொடர்பான வழக்கு 25.1.2008 முதல் தொடர்ந்து நடந்து வந்தது. இதில் ரூ.3 கோடியே 75 லட்சத்து 20 ஆயிரத்து 221 அளவுக்கு சொத்து சேர்த்துள்ளதாக சிபிஜ குற்றம் சாட்டியுள்ளது. இந்த வழக்கு புதுவை மாவட்ட முன்மை அமர்வு நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி முருகன் முன்னிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. குற்றம் சாட்டப்பட்ட ஆனந்தன், தற்போதைய எம்.எல்.ஏ. ஆசோக் ஆனந்தன் ஆகியோர் நேரில் ஆஜராகினர். சாட்சிகள் தரப்பில் அப்போதைய அரியாங்குப்பம் இந்தியன் வங்கி மேலாளர் தங்கவேல் ஆஜரானார். அவர், வங்கியில் குற்றம் சாட்டப்பட்டோர் வைத்திருந்த கணக்கு விபரங்களை நீதிபதியிடம் தெரிவித்தார். இவ்வழக்கில் சிபிஜ தரப்பில் அரசு வழக்கறிஞர் வேங்கடவரதன் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி 7-ந் தேதிக்கு விசாரணையை தள்ளி வைத்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்