முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நைஜீரிய விமான விபத்துக்கு என்ஜின்கோளாறே காரணம்

புதன்கிழமை, 6 ஜூன் 2012      உலகம்
Image Unavailable

 

லாகோஷ், ஜூன். - 6 - 153 பேரை பலி வாங்கிய நைஜீரிய விமான விபத்துக்கு அந்த விமானத்தின் என்ஜின்கள் பழுதானதே காரணம் என்று அந்த விமானத்தின் பைலட் அது வெடிப்பதற்கு முன்பு கண்ட்ரோல் ரூமில் தெரிவித்துள்ளார்.  நைஜீரிய விமானம் ஒன்று லாகோஷ் நகரில் நேற்று முன்தினம் திடீரென்று வெடித்து சிதறி கீழே விழுந்து தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் அந்த விமானத்தில் பயணம் செய்த இந்திய துணை பைலட் உட்பட 153 பேர் பலியானார்கள். சம்பந்தப்பட்ட விமானம் லாகோஷ் நகரில் விபத்துக்குள்ளானது. இது கீழே விழுவதற்கு முன்பாக அந்த விமானத்தின் 2 என்ஜின்களும் திடீரென்று பழுதாகிப் போய் விட்டன. இத்தகவலை விமான போக்குவரத்து தலைமை அதிகாரி தெரிவித்தார்.  விமானம் விபத்துக்குள்ளாவதற்கு முன்பு அந்த விமானத்தின் பைலட் கண்ட்ரோல் ரூமிற்கு அதை தெரிவித்துள்ளார். இந்நிலையில் மீட்பு பணியாளர்கள் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டு இடிபாடுகளில் இருந்து இதுவரை 137 உடல்களை மீட்டுள்ளனர். அதில் ஒரு பெண்மணி தன் குழந்தையை கட்டி அணைத்தபடி பிணமாக கிடந்துள்ளார். விபத்துக்குள்ளான விமானம் ஒரு கட்டிடத்தின் மீது விழுந்தது. அந்த கட்டிடத்தில் இருந்தவர்கள்தான் இந்த தாயும், குழந்தையும்.  கட்டிடத்தில் விமானம் விழுந்ததால் அங்கிருந்த சிலர் காயமடைந்தனர். அவர்களில் 4 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விமானம் விழுந்த போது உடனடியாக தீப்பிடித்து வெடிக்கவில்லை. 10 நிமிடம் கழித்தே அந்த விமானம் வெடித்து சிதறி தீப்பிடித்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த விமானம் விபத்துக்குள்ளாவதற்கு முன்பு விமான நிலையத்தில் ஒரே குழப்பம் நிலவியது. பிறகு விபத்து பற்றி தெரிந்ததும் அந்த பகுதியே சோகத்தில் மூழ்கியது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்