முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலம் :தி.மு.க. வேட்பாளருடன் அனுமதி பெறாமல் அணிவகுத்து சென்ற கார்கள் பறிமுதல்

புதன்கிழமை, 30 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

திருமங்கலம், மார்ச். - 30 - திருமங்கலம் அருகே போலீசார் நடத்திய அதிரடி சோதனையின் போது தி.மு.க. வேட்பாளருடன் அனுமதி பெறாமல் அணிவகுத்து சென்ற தி.மு.க. பிரமுகர்களின் 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது. திருமங்கலம் தொகுதி தி.மு.க.  வேட்பாளர் மணிமாறன் நேற்று முந்தினம் இரவில் கள்ளிக்குடி அருகேயுள்ள ஓடைப்பட்டி பகுதியில் பிரச்சாரத்திற்கு சென்றுள்ளார். அப்போது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி தி.மு.க. வேட்பாளருடன் ஏராளமான கார்கள் செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருமங்கலம் ஆறுகண் பாலம் அருகேயுள்ள சோதனைச்சாவடியில் பமியிலிருந்த மத்திய, மாநில போலீசார் தி.மு.க. வேட்பாளரின் கார் அணிவகுப்பை நிறுத்தி சோதனை போட்டனர்.

அப்போது தேர்தல் ஆணையத்தின் முறையான அனுமதி பெறாமல் ஆட்களை ஏற்றி வந்த தி.மு.க. நகராட்சி கவுன்சிலர் முருகனின் ஸ்கார்பியோ கார், கள்ளிக்குடி ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஆதிமூலத்தின் சுமோ கார் என 2 கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சமயத்தில் அணிவகுப்பில் வந்த திருமங்கலம் எம்.எல்.ஏ., லதா அதியமானின் சபாரிகார் இருளில் மாயமாகிவிட்டது. இது தொடர்பாக எஸ்.ஐ. குருசாமி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த திருமங்கலம் டவுன் போலீசார், எஸ்கேப் ஆகிவிட்ட எம்.எல்.ஏ., வின் சபாரி காரை தீவிரமாக வலைவீசி தேடிவருகின்றனர். இந்த சம்பவம் திருமங்கலம் தொகுதி தி.மு.க. வினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago