முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி.இடைத்தேர்தல்: முலாயம்சிங் மருமகள்டிம்பிள் வேட்புமனு தாக்கல்

புதன்கிழமை, 6 ஜூன் 2012      அரசியல்
Image Unavailable

கன்னோஜ் (உ.பி.) ஜூன்.- 6 - உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கன்னோஜ் லோக்சபை தொகுதி இடைத்தேர்தலில் சமாஜ்வாடி கட்சி சார்பாக போட்டியிட முலாயம் சிங் யாதவ் மருமகளும் முதல்வர் அகிலேஷ் யாதவ் மனைவியுமான டிம்பிள் யாதவ் நேற்று வேட்புமனுத்தாக்கல் செய்தார். கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கன்னோஜ் லோக்சபை தொகுதியில் சமாஜ்வாடி கட்சி சார்பாக முலாயம் சிங் யாதவ் மகன் அகிலேஷ் யாதவ் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அவர் தற்போது முதல்வராகிவிட்டதால் அந்த தொகுதியின் எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிட்டார். அதனால் அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் அகிலேஷ் யாதவ் மனைவி டிம்பிள் யாதவ் போட்டியிட நேற்று வேட்புமனுத்தாக்கல் செய்தார். வேட்புமனுத்தாக்கல் செய்ய டிம்பிள் சென்றபோது அவரது கணவரும் முதல்வருமான அகிலேஷ் யாதவும் உடன் சென்றார். இந்த தொகுதியில் போட்டியிடப்போவதில்லை என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது. வேட்புமனுத்தாக்கல் செய்த பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த டிம்பிள், கன்னோஜ் தொகுதி முன்னேற்றத்திற்கு பாடுபடுவேன் என்றார். முந்தைய பகுஜன்சமாஜ் அரசை கடுமையாக தாக்கினார். வருகின்ற 24-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலின்போது பெரோஜாபாத் லோக்சபை தொகுதியில் டிம்பிள் போட்டியிட்டார். ஆனால் காங்கிரஸ் வேட்பாளர் ராஜ்பாப்பரிடம் படுதோல்வி அடைந்தார். இந்தத்தடவை கன்னோஜ் தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடாததால் டிம்பிள் எளிதாக வெற்றிபெறுவார். முன்னதாக சமாஜ்வாடி கட்சி சார்பாக பேரணி நடைபெற்றது. பேரணியில் முதல்வர் அகிலேஷ் யாதவ் கலந்துகொண்டு பேசினார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்