முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலக்கரி இறக்குமதியில் ஊழல்: பிரதமரிடம் விசாரணை நடத்த பா.ஜ.கோரிக்கை

வியாழக்கிழமை, 7 ஜூன் 2012      ஊழல்
Image Unavailable

புதுடெல்லி,ஜூன்.- 7 - நிலக்கரி ஊழல் குற்றச்சாட்டு குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று பாரதிய ஜனதா கோரியுள்ளது. பிரதமர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இதற்கு பதில் அளித்த பிரதமர் மன்மோகன் சிங், தம் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் பொதுவாழ்வில் இருந்து ஒதுங்கிக்கொள்வதாக அறிவித்தார். மேலும் பிரதமர் மன்மோகன் சிங் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை என்று காங்கிரஸ் காரியகமிட்டி கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி கூறினார். இதனையடுத்து பிரதமர் கூறிய குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரங்களை சோனியா காந்தியிடம் அண்ணாஹசாரே குழுவினர் நேரிடியாக சந்தித்து கொடுத்தனர். அதனால் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அவர் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கோரியுள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சியில் பல்வேறு ஊழல்கள் மிகப்பெரிய அளவில் நடந்துள்ளன. ஆனால் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் மன்மோகன் சிங்கை காப்பாற்றும் வகையில் சோனியா காந்தி பேசியுள்ளார். எங்களை குறை கூறி பேச காங்கிரசுக்கு உரிமை இருக்கிறது. அதற்கு நாங்கள் ஆட்சேபம் தெரிவிக்கமாட்டோம். காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் குறிப்பிடத்தக்க சாதனைகள் எதுவும் இல்லை. அதேசமயத்தில் எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லாமல்  எங்கள் மீது குறை கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது துரதிர்ஷ்டவசமானது என்று பாரதிய ஜனதா செய்தி தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் நாட்டில் விலைவாசி மற்றும் ஊழல்களால் காங்கிரஸ் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுவிட்டது என்று கட்சியின் 40-க்கும் மேற்பட்ட தலைவர்கள் கூறியுள்ளனர். அப்படி இருந்தும் இந்த உண்மையான நிலையில் இருந்து தப்பிக்க சோனியா காந்தியும் பிரதமர் மன்மோகன் சிங்கும் தப்பித்துக்கொள்ள முயற்சி செய்கிறார். இத்தனை கூற்றச்சாட்டுக்களை எதிர்க்கட்சிகள் கூறினாலும் அதை தடுத்து நிறுத்த மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மத்திய அரசு செயலற்ற இருக்கிறது. அதோடு மட்டுமல்லாது ஊழல் குற்றச்சாட்டுக்களை மறுப்பது காங்கிரஸ் கட்சியின் இயல்பான குணமாகும் என்று பிரசாத் மேலும் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago