முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தனது குழுவில் பிளவு இல்லை என்கிறார் அன்னா ஹசாரே

வியாழக்கிழமை, 7 ஜூன் 2012      ஊழல்
Image Unavailable

 

மும்பை, ஜூன் - 7- தனது  தலைமையிலான குழுவில் பிளவு எதுவும் இல்லை என்று  அன்னா ஹசாரே மறுத்துள்ளார்.  பிளவு இருப்பதாக கூறுவது ஊடகங்களின்  உருவாக்கம் என்றும் அவர் வர்ணித்துள்ளார். ஊழலுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வரும் பிரபல சமூக சேவகர் அன்னா ஹசாரே தலைமையிலான குழுவில்  அர்விந்த் கெஜ்ரிவால், கிரண் பேடி உள்ளிட்ட பல முக்கியத்தலைவர்கள் உள்ளனர். இக்குழுவினர் இடையே ஏற்கனவே ஒருமுறை கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன.  பிறகு சுமூகமாக இருந்துவரும் இக்குழுவில்  சில தலைவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாக  ஊடகங்களில் செய்திகள் வெளியாயின. இது குறித்து மும்பையில் அன்னா ஹசாரேவிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு  தனது  தலைமையிலான குழுவில்  யாருக்கு இடையேயும் கருத்து வேறுபாடுகள் இல்லை என்று அன்னா ஹசாரே மறுத்தார். தங்கள் குழுவில் பிளவு இருப்பதாக கூறுவதை  ஊடகங்களின் உருவாக்கம் என்றும்  அவர் கூறினார். எங்களது குழுவில் கருத்துவேறுபாடு எதுவும் இல்லை.  பா.ஜ.க. தலைவர் நிதின் கட்காரியை யோகாகுரு பாபா ராம்தேவ் சந்தித்து பேசியது தொடர்பாக எங்களது குழுவில்  பிளவு எதுவும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். டெல்லியில் நடந்த ஒரு பேரணியில் தங்களது குழுவின் தலைவர் அர்விந்த் கெஜ்ரிவாலை பற்றி பாபா ராம்தேவ் பேசியது தொடர்பாகவும் எந்த பிரச்சினையும் எழவில்லை என்றும் அவர் கூறினார். கறுப்பு பணத்தை ஒழிக்க வேண்டும், வலுவான லோக்பால் மசோதாவை கொண்டு வர வேண்டும் என்று ராம்தேவும்  விரும்பினார்.  பிரச்சினைகளை திசை திருப்ப ராம்தேவ் விரும்பவில்லை என்றும் அவர் கூறினார். பிரதமர் என்பவர் கண்ணியமானவராகவும்  ஊழலற்றவராகவும் இருக்க வேண்டும் என்றுதான்  நாங்கள் விரும்புகிறோம். ஆனால் அவர் ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்கப்படக்கூடாது என்றும் நாங்கள் விரும்புகிறோம் என்றும் அன்னா ஹசாரே கூறினார். மன்மோகன் சிங், நிலக்கரித் துறை அமைச்சராக இருந்தபோது நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விட்ட போது சந்தேகத்திற்கு இடமான சில நடவடிக்கைகள் நடந்து உள்ளன என்பது மத்திய கணக்கு தணிக்கை குழு மூலமாக  தெரியவந்துள்ளது என்றும் அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்