முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க. குடும்ப ஆட்சியை தூக்கி எறிய தமிழக மக்கள் முடிவு எடுத்து விட்டார்கள் - ஜெயலலிதா

வியாழக்கிழமை, 31 மார்ச் 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை,மார்ச்.- 31 - தமிழகத்தில் தி.மு.க. மைனாரிட்டி குடும்ப ஆட்சியை தூக்கி எறிய தமிழக மக்கள் தெளிவாக முடிவு செய்துவிட்டார்கள் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறினார்.  தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 13-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, அ.தி.மு.க. வேட்பாளர்களையும் அதன் கூட்டணி வேட்பாளர்களையும் ஆதரித்து முதல் கட்ட பிரசாரம் செய்தார். கடந்த 7 நாட்களாக தீவிரமாக பிரசாரம் செய்தார். முதல் நாளன்று ஜெயலலிதா, தான் போட்டியிடும் ஸ்ரீரங்கம் தொகுதியில் இருந்து பிரசாரத்தை தொடங்கினார். அதனையடுத்து திருச்சி மற்றும் அதனை சுற்றிய பகுதிகள், கரூர் மாவட்டத்தில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்தார். அதனையடுத்து தஞ்சை,திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் ஜெயலலிதா பிரசாரம் செய்தார். அதனையடுத்து நேற்று விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் அ.தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். ஜெயலலிதா சென்ற இடங்களில் மக்கள் அலைகடலென திரண்டு ஆதரவு தெரிவித்தனர். இத்துடன் முதல் கட்ட பிரசாரத்தை முடித்துக்கொண்டு ஜெயலலிதா நேற்று சென்னை வந்தார். சென்னையில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். பேட்டியின்போது ஜெயலலிதா, மிகவும் உற்சாகமாக காணப்பட்டார். 

அ.தி.மு.க.வுக்கு வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கிறது என்று நிருபர்கள் கேட்டதற்கு பதில் அளித்த ஜெயலலிதா, தமிழகத்தில் குடும்ப ஆட்சி நடத்தி வரும் தி.மு.க. மைனாரிட்டி அரசை தூக்கி எறிய தமிழக மக்கள் தெளிவாக முடிவு செய்துவிட்டார்கள். தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைவது உறுதி என்றார். தமிழகத்தில் திரைப்படத்துறை உள்பட அனைத்து துறைகளிலும் கருணாநிதி குடும்பத்தினர் ஆதிக்கம் செலுத்தத்தொடங்கி கொள்ளையடித்து வருகிறார்கள். இதனால் வெறுப்படைந்துள்ள மக்கள் தி.மு.க. மைனாரிட்டி அரசை தூக்கி எறிவது உறுதியாகும் என்றார். 

தேர்தலில் கூட்டணி கட்சி தலைவர்களுடன் சேர்ந்து முதலில் பிரசாரம் செய்ய நான் முடிவு செய்திருந்தேன். ஆனால் எதிர்பாராதவிதமாக என்னால் கூட்டணி தலைவர்களுடன் சேர்ந்து பிரசாரம் செய்ய முடியவில்லை. இதற்காக நான் மிகவும் வருந்துகிறேன். தேர்தல் தேதியை தேர்தல் கமிஷன் விரைவாக அறிவித்து விட்டதாலும் போதுமான கால அவகாசம் இல்லாததாலும்தான் நான், கூட்டணி தலைவர்ளுடன் சேர்ந்து பிரசாரம் செய்ய முடியவில்லை என்றும் ஜெயலலிதா கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்