முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளருடன் கடும் போட்டி

வெள்ளிக்கிழமை, 8 ஜூன் 2012      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்,ஜூன்.8 - அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக போட்டியிடும் மித் ரோம்னிக்கும் எனக்கும் கடும் போட்டி நிலவும் என்று அதிபர் பாரக் ஒபாமாவே ஒப்புக்கொண்டுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பாக தற்போது அதிபராக இருக்கும் பாரக் ஒபாமாவும் குடியரசு கட்சி சார்பாக மித் ரோம்னியும் போட்டியிடுகிறார்கள். அதிபர் தேர்தலில் எனக்கும் மித்ரோம்னிக்கும் இடையே கடும் போட்டி நிலவும். இதற்கு காரணம் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி இல்லை அமெரிக்காவின் போருளாதார வளர்ச்சி எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இல்லை என்று ஒபாமா கூறினார். கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் பிரான்சிஸ்கோவில் நடந்த ஜனநாயக கட்சி தேர்தல் பிரசார கூட்டத்தில் ஒபாமா கலந்துகொண்டு பேசுகையில் மேற்கண்டவாறு கூறினார். அதேசமயத்தில் மித்ரோம்னி மற்றும் அவரது குடியரசு கட்சியின் பொருளாதார கொள்கைகளை கடுமையாக சாடினார். ரோம்னி அறிவித்துள்ள 5 திரிலியன் வரி தள்ளுபடி நாட்டின் பொருளாதாரத்தையே சீர்குலைத்துவிடும். தாராள சந்தை முறையில் நாம் நம்பிக்கை வைத்திருக்கிறோம். உலகத்திலேயே அமெரிக்கா தொடர்ந்து முதலிடம் வகிக்கவும் அமெரிக்கர்கள் பெரியவர்கள் என்பதற்கான வழிமுறைகளை நாம் கையாள வேண்டும். எனக்கும் ரோம்னிக்கும் அதிக கருத்துவேறுபாடு உள்ளது. நாம் முன்னேற கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது என்று ஒபாமா மேலும் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்