முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடுமையாக உழைத்தால் அனைவருக்கும் பலன்: கலாம்

வெள்ளிக்கிழமை, 8 ஜூன் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.8 - எஸ்.பி.ஓ.ஏ.பள்ளி மற்றும் இளநிலை கல்லூரி மாணவர்களுடன் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னை அண்ணா நகரில் உள்ள எஸ்.பி.ஓ.ஏ. பள்ளி மற்றும் இளநிலை கல்லூரி மாணவ அரங்கில் புதனன்று மாலை 4 மணிக்கு நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த அப்துல் கலாம் முதல் நிகழ்வாக வளாகத்திற்கு மரக் கன்றை நட்டார். 

பின்னர் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:-

மின்சாரத்தை கண்டுபிடித்தவர் தாமஸ் ஆல்வா எடிசன். தொலைபேசியை கண்டுபிடித்தவர். கிராஹம் பெல் அவர்களுடைய கடுமையான உழைப்பினால் அதன் பலனை நாம் இன்று அனுபவிக்கின்றோம். அதேபோல் நாமும் கடுமையாக உழைத்தால் அனைவருக்கும் பலன் உடையதாக விளங்கலாம்.

இன்றைய தேவை இந்தியா வலுவான நாடாக முன்னேற வேண்டும். அது இளைஞர்களான உங்கள் கையில் தான் உள்ளது. இதை செயலாக்க விழிப்போடு கனவுகாண வேண்டும். அயராது உழைக்க வேண்டும் விடாப்படியாக உழைக்க வேண்டும். அப்படி உழைத்தால் வானில் பறக்கலாம் என்று அப்துல் கலாம் பேசினார்.

எஸ்.பி.ஓ.ஏ. கல்வி குழுமத்தின் சார்பில் நடைபெற்ற ஐந்தர் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அக்குழுமத்தின் மூன்று பள்ளிகளைச் சேர்ந்த 1200 -க்கு மேற்பட்ட 2ை மாணவர்கள் கலந்து கொண்டனர்.

எஸ்.பி.ஓ.ஏ. கல்விக் குழும அறக்கட்டளைத் தலைவர் சுரேஷ் குமார், தாளாளர் ப்ரான்கோ ராஜேந்திர தேவ், மற்றும் பள்ளி மற்றும் இளநிலை கல்லூரி முதல்வர் செல்வராணி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்