முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆ.ராசாவுடன் ஸ்டாலின் கனிமொழி சந்திப்பு

வெள்ளிக்கிழமை, 8 ஜூன் 2012      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி, ஜுன் 8 - 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைதாகி ஜாமீனில் விடுதலை ஆகியிருக்கும் தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவை, மு.க.ஸ்டாலின் மற்றும் கனிமொழி ஆகியோர் நேற்று டெல்லியில் சந்தித்துப் பேசினர்.  2 ஜி. ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் வழக்கில் கைதாகி டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர் தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா. இவ்வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ராசா தவிர கனிமொழி உட்பட அனைவரும் ஜாமீனில் விடுதலை ஆகிவிட்ட நிலையில் கடைசியாக ஆ.ராசாவுக்கு சி.பி.ஐ. நீதிமன்றம் நிபந்தனையுடன் கூடிய ஜாமீனை வழங்கியது. இதையடுத்து டெல்லியிலேயே தங்கியிருக்கும் ஆ.ராசாவை, மு.க. ஸ்டாலின் டெல்லியில் சந்தித்து பேசினார். அவருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன், கனிமொழி, டி.ஆர். பாலு, தயாநிதிமாறன் ஆகியோரும் இருந்தனர். 

முன்னதாக டெல்லி வந்த ஸ்டாலின் செய்தியாளர்கள் சந்திப்பின்போது ராசா ஜாமீனில் விடுதலை ஆனபோது நான் லண்டனில் இருந்தேன். அதனால் அவரை சந்திக்க முடியவில்லை. எனவேதான் தற்போது வந்துள்ளேன் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago