முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் 15 கேமிரா

வெள்ளிக்கிழமை, 8 ஜூன் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.8 - சென்னை அரசு பொது மருத்துவமனையில் டாக்டர்கள் தாக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது. பயிற்சி மற்றும் அரசு டாக்டர்களின் போராட்டத்தை அடுத்து அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் வி.எஸ்.விஜய் உறுதியளித்தார். இதனால் 5 நாட்களாக நடந்து வந்த பயிற்சி டாக்டர்களின் போராட்டம் வாபஸ் ஆனது. போராட்டத்தை வாபஸ் பெற்று பயிற்சி டாக்டர்கள் நேற்று வழக்கம்போல பணிக்கு திரும்பினார்கள். டாக்டர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக முதல்கட்டப் பாதுகாப்பு பணிகள் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் நேற்று தொடங்கி விட்டன.

அவசர சிகிச்சை வார்டில் நோயாளிகள் உதவியாளர்கள் அத்துமீறி கூட்டமாக செல்வதை தடுக்க தடுப்பு இரும்பு வேலி இருபுறமும் அமைக்கப்படுகிறது. 201​ வது வார்டில் தடுப்பு வேலி அமைக்கும் வேலை தொடங்கி விட்டது.

அவசர சிகிச்சை பிரிவு மற்றும் வார்டுகளில் நோயாளிகளுடன் வரும் உதவியாளர்கள் யார்? சிகிச்சை பெறுபவருடன் தங்கி இருப்பவர் யார்? போன்ற விவரங்கள் பதிவேட்டில் குறிப்பிடவேண்டும். அங்கு 15 கேமிராக்கள் பொறுத்தப்படுகிறது.

அவசர சிகிச்சை (202), காயம் அடைந்தவர்கள் சிகிச்சை பெறும் வார்டுகள் 201, 205, 206 ஆகிய வார்டுகளில் கண்காணிப்பு கேமிரா பொறுத்தப்படுகிறது. இந்த கேமிராக்கள் அவசர சிகிச்சை பிரிவிற்கு வரும் நோயாளிகளை படம் பிடித்து பதிவு செய்துவிடும். இதற்கான கட்டுப்பாட்டு அறை ஒன்றும் தயாராகிறது. அங்கிருந்து வார்டுக்கு வருபவர்களை கண்காணிக்கப்படுவார்கள் என்று சென்னை அரசு பொது மருத்துவமனை டீன் கனகசபை தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்