முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க.விற்கு வன்னியர் கூட்டமைப்பு ஆதரவு

வெள்ளிக்கிழமை, 8 ஜூன் 2012      தமிழகம்
Image Unavailable

சேலம் ஜூன்.8 - புதுக்கோட்டை இடைத் தேர்தலில் அ.தி.மு.க.விற்கு வன்னியர் கூட்டமைப்பு ஆதரவு அளிப்பதாக அதன் நிறுவன தலைவர் சி.என்.ராமமூர்த்தி தெரிவித்துள்ளார். சேலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்திருந்த வன்னியர் கூட்டமைப்பின் நிறுவன தலைவர் சி.என்.ராமமூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது.தமிழக முதல்வர் ஜெயலலிதா சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார். அவர் இந்த ஒரு ஆண்டில் பல திட்டங்களை கொண்டு வந்து மக்களின் பாராட்டை பெற்றுள்ளார். இதனால் நாங்கள் புதுக்கோட்டை இடைத் தேர்தலில் அ.தி.மு.க.விற்கு ஆதரவு தருகிறோம்.நாளை முதல் நாங்கள் அங்கு சென்று அ.தி.மு.க.விற்கு ஆதரவும் திரட்டுகிறோம். மத்திய அரசு மாநில அரசின் எல்லா பிரச்சனைகளிலும் தலையிடுகிறது. தமிழகத்திற்கு குறைவான நிதியை மத்திய அரசு ஒதுக்குகிறது. தற்போது ரெயில்வே சரக்கு கட்டணத்தையும், பெட்ரோல் விலையையும் மத்திய அரசு உயர்த்தி இருக்கிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களின் நலன் கருதி தமிழக முதல்வர் பெட்ரோல் விலையை குறைக்க கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினார். பின்னர் பெட்ரோல் விலையை மத்திய அரசு கொஞ்சம் குறைத்துள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் லாபத்தில் இயங்கும் போது  பெட்ரோல் விலையை உயர்த்தியது தவறு.டாக்டர் ராமதாஸ் வன்னிய மக்களுக்கு ஏதும் செய்யவில்லை. ராமதாசும், அன்பு மணி ராமதாசும் தவறாக பேசி மற்ற சமுதாய மக்களை திசை திருப்ப பார்க்கிறார்கள். அடிக்கடி ராமதாஸ் கூட்டணி மாறுவதால் அடுத்தடுத்த தேர்தல்களில் தோல்வியை சந்தித்து வருகிறார். இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago