முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

யூரோ கோப்பை கால்பந்து போட்டி இன்று துவக்கம்!

வெள்ளிக்கிழமை, 8 ஜூன் 2012      விளையாட்டு
Image Unavailable

 

வார்சா, ஜூன். 8 - உலகில் உள்ள கால்பந்து ரசிகர்களின் விறுவிறுப்பை அதிகரிக்கும், யூரோ கோப்பை கால்பந்து போட்டி இன்று முதல் துவங்குகிறது. இதில் ஸ்பெயின், ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட பல முன்னணி கால்பந்து அணிகள் கோப்பையை தட்டி செல்ல காத்திருக்கின்றன. ஐரோப்பிய நாடுகள் மட்டுமே கலந்து கொள்ளும் யூரோ கோப்பை கால்பந்து போட்டி, கால்பந்து ரசிகர்கள் இடையே அதிக எதிர்பார்ப்பை கொண்டது. 

இன்று முதல் துவங்கும் 14வது யூரோ கோப்பைக்கான கால்பந்து தொடரை போலாந்து மற்றும் உக்ரைன் நாடுகள் சேர்ந்து நடத்துகின்றன. இதில் கலந்து கொள்ள உள்ள 16 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.  குரூப் ஏ பிரிவில் ரஷ்யா, போலாந்து, செக் குடியரசு, கிரீஸ் ஆகிய 4 அணிகள் இடம் பெற்றுள்ளன. குரூப் பி பிரிவில் ஜெர்மனி, நெதர்லாந்து, டென்மார்க், போர்ச்சுக்கல் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. குரூப் சி பிரிவில் ஸ்பெயின், குரோயடியா, இத்தாலி, அயர்லாந்து ஆகிய அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. ாகுரூப் டிா பிரிவில் பிரான்ஸ், இங்கிலாந்து, ஸ்வீடன், உக்ரைன் அணிகள் உள்ளன.

இதில் நடப்பு சாம்பியனாக ஸ்பெயின் களமிறங்க உள்ளது. ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, பிரான்ஸ் ஆகிய அணிகளும் சாம்பியனாக துடிக்கின்றன. இந்த நிலையில் யூரோ கோப்பையின் முதல் போட்டி இன்று வார்சா மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் குரூப் ஏ பிரிவில் உள்ள போலாந்து, கீரிஸ் அணிகள் மோத உள்ளன. சொந்த மண்ணில் களமிறங்கும் போலந்து, இன்றைய போட்டியில் வெற்றியுடன் துவங்க வேண்டும் என்ற ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர். மூன்று முறை உலக கோப்பை மற்றும் நடப்பு யூரோ கோப்பை சாம்பியனாகி உள்ள ஜெர்மனி, மீண்டும் யூரோ கோப்பையை கைப்பற்றும் என்று ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்