முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளா ​கர்நாடகாவில் மழை பெய்வதால் தமிழ்நாட்டில் வெப்பம்குறையும்

சனிக்கிழமை, 9 ஜூன் 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஜூன்.- 9 - தமிழ்நாட்டில் அக்னி வெயில் முடிந்து 1 வாரம் ஆகியும் வெயிலின் தாக்கம் குறையவில்லை. வேலூரில் நேற்று 107.6 டிகிரி வெயில் கொளுத்தியது.  சென்னை மீனம்பாக்கத்தில் 106.3 டிகிரியும், நுங்கம்பாக்கத்தில் 104.9 டிகிரியும் வெயில் சுட்டெரித்தது. இரவு நேரத்திலும் தூங்க முடியாத அளவுக்கு புழுக்கம் அதிகமாக உள்ளது.  வெயிலின் தாக்கம் குறையுமா? எப்போது மழை வரும் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில் உள்ளனர். இதுபற்றி சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியதாவது:​  வெயிலின் தாக்கம் கடந்த 1 வாரமாக அதிகமாக உள்ளதற்கு வான்வெளியில் ஈரப்பதம் இல்லாததே காரணம். தற்போது கேரளா, கர்நாடகா மாநிலங்களில் மழை பெய்ய ஆரம்பித்துள்ளதால் அந்த ஈரக்காற்று தமிழகம் பகுதியில் ஓரளவு பரவி வருகிறது. இதனால் வெப்ப சலனம் ஏற்பட்டு ஆங்காங்கே மழை பெய்கிறது.  சென்னையில்  மாம்பலம், சைதை,  தாம்பரம், வண்டலூர் பகுதியில் நேற்று முன்தினம் ஓரளவு மழை பெய்தது. இதேபோல் இரவு நேரங்களில் இனி ஆங்காங்கே மழையை எதிர்பார்க்க முடியும்.  இதன்மூலம் வெப்பத்தின் தாக்கம் இனி படிப்படியாக குறையும்.  இவ்வாறு வானிலை அதிகாரி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்