முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாக்குச்சாவடி நுண்பார்வையாளர்களுக்கு தேர்தல் பார்வையாளர் முன்னிலையில் பயிற்சி

சனிக்கிழமை, 9 ஜூன் 2012      தமிழகம்
Image Unavailable

புதுக்கோட்டை. ஜூன்.- 9 - புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், புதுக்கோட்டை சட்டமன்றத்தொகுதி இடைத்தேர்தலையொட்டி வாக்குச்சாவடி நுண்பார்வையாளர்களுக்கான பயிற்சி, தேர்தல் பார்வையாளர் (பொது) பிரேம்சிங்மெக்ரா முன்னிலையில், மாவட்ட கலெக்டர் வ.கலைஅரசி தலைமையில் நடைபெற்றது.
இப்பயிற்சியில் மிக பதட்டமானவை என கண்டறியப்பட்ட 37வாக்குச்சாவடிகளுக்கு நியமிக்கப்படவுள்ள நுண்பார்வையாளர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நாளன்று மாதிரி வாக்குப்பதிவு நடத்துதல், வாக்குப்பதிவு அலுவலர்களின் பணிகள், வாக்குச்சாவடி முகவர்களின் செயல்பாடுகள், வாக்குப்பதிவு முடிவு பெறும் நேரத்தில் மேற்கொள்ளவேண்டிய பணிகள் உள்ளிட்ட வாக்குச்சாவடி செயல்பாடுகள் அனைத்தும் சரியான முறையில் நடைபெறுகிறதா? என்பதை உன்னிப்பாக கண்காணித்து அதனைப்பதிவு செய்தல் தொடர்பான பயிற்சி வழங்கப்பட்டது. இந்த பயிற்சியில் 39 நுண்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். இப்பயிற்சியின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் க.நாகராசன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சி.சொக்கன், தேர்தல் வட்டாட்சியர் கே.வெங்கடசுப்பிரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்