முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரெஞ்சு ஓபன் கலப்பு இரட்டையரில் மகேஷ் பூபதி - சானியா ஜோடி சாம்பியன்

சனிக்கிழமை, 9 ஜூன் 2012      விளையாட்டு
Image Unavailable

 

பாரிஸ், ஜூன். - 9 - பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியி ன் கலப்பு இரட்டையர் இறுதிச் சுற்றில் இந்தியாவின் மகேஷ் பூபதி மற்றும் சானியா மிர்சா ஜோடி வெற்றி  பெற்று சாம்பியன் பட்டத்தை வென்று சாத னை படைத்தது. மகேஷ் பூபதி மற்றும் சானியா மிர்சா ஜோடி 2-வது முறையாக கிராண்ட் ஸ்லாம் போட்டியில் சாம்பியன் பட்ட ம் வென்று உள்ளது. இறுதிச் சுற்றில் இந்திய ஜோடி போலந்து மற்றும் மெக்சி கோ இணையை வீழ்த்தியது. இந்த வருடத்தின் 2 -வது கிராண்ட் ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபன் போட்டி பிரான்ஸ் நாட்டின் தலைநக ரான பாரிசில் கடந்த 2 வார காலத்திற் கும் மேலாக நடந்து வந்தது. இந்தப் போட்டியில் சாம்பியன் பட்டத் தைக் கைப்பற்ற முன்னணி வீரர்கள் மற் றும் வீராங்கனைகள் களத்தில் குதித்த னர். இந்தப் போட்டி தற்போது இறுதிக் கட்டத்தை அடைந்து விட்டது. இதில் பங்கேற்று வரும் முன்னணி வீரர் கள் மற்றும் வீராங்கனைகள் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். அவர்களது ஆட்டத் திறன் கண்டு ரசிகர் கள் வியப்பில் ஆழ்ந்தனர். கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதிச் சுற்று ஆட்டம் நடந்தது. இதில் பட்டத் தைக் கைப்பற்ற இந்தியாவின் மகேஷ் பூபதி மற்றும் சானியா மிர்சா ஜோடி யும், போலந்து மற்றும் மெக்சிகோ இணையும் மோதின.  பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் மகேஷ் மற்றும் மிர்சா ஜோடி அபார மாக ஆடி, 7- 6(3), 6- 1 என்ற நேர் செட் கணக்கில் சாண்டியாகோ மற்றும் கிளாடியா இணையை வீழ்த்தி பட்டம் வென்றது. இந்தப் போட்டி 1 மணி மற்று ம் 13 நிமிடத்தில் முடிந்தது. பூபதி மற்றும் சானியா ஜோடி பெறும் 2-வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் இது வாகும். தவிர, பிரெஞ்சு ஓபனில் முத ல் முறையாக பட்டம் வென்று உள்ள து. மகேஷ் 13 கிராண்ட் ஸ்லாம் பட்ட ம் வென்று இருக்கிறார். இதற்கு முன் 2009 -ம் ஆண்டு நடந்த ஆஸ்திரேலிய ஓபனில் இருவரும் இணைந்து விளையாடி முதலாவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றனர். 

இதன் முலம் கிராண்ட் ஸ்லாம் போட்டியின் இறுதிச் சுற்றில் விளையாடி, பட்டம் வென்ற முதலாவது இந்திய வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றார். 3 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்று இருக்கிறார். 

அதிக முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற இந்திய வீரர்களில் லியாண்டர் பயஸ் முதலிடத்தில் இருக்கிறார். இவர் 14 முறை பட்டம் வென்று இருக்கிறார். 

இதில் 7 பட்டம் ஆண்கள் இரட்டையர் பிரிவில் பெற்ற பட்டமாகும். பல்வேறு பார்ட்னர்களுடன் இணைந்து 

அவர் மேற்படி பட்டங்களைப் பெற்றார். 

இந்த பட்டத்தின் மூலம் மகேஷ் பூபதி மற்றும் சானியா மிர்சா ஜோடிக்கு லண்டன் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பு உருவாகி உள்ளது. 

இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையான சானியா ஒற்றையர் பிரிவில் பெ 

றும் வெற்றிகளைப் பொறுத்து லண்டன் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும். 

2-வது முறையாக கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றது குறித்து இந்தியாரின் முன்னணி வீராங்கனையான சானியா

விடம் கேட்ட போது, அவர் கூறியதா

வது - 

இது எனது பிறந்த நாளில் கிடைத்த 2-வது பரிசாகும். ஏற்கனவே முதல் கிரா

ண்ட் ஸ்லாம் பட்டத்தையும் பிறந்த நா

ளிலேயே பெற்றேன் என்றார் அவர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்