முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவில் இ.கம்யூ அரசுக்கு எதிரான அலை வீசவில்லை- பாலகிருஷ்ணன்

வியாழக்கிழமை, 31 மார்ச் 2011      இந்தியா
Image Unavailable

 

திருவனந்தபுரம்,மார்ச்.- 31 - கேரளாவில் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசுக்கு எதிராக அலை வீச வில்லை என்று மாநில உள்துறை அமைச்சரும் இடது கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சிமன்ற குழு உறுப்பினருமான கொடியேறி பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  கேரள மாநிலத்திலும் வருகின்ற ஏப்ரல் மாதம் 13-ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. அனைத்து கட்சிகளும் தங்களுடையே வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணன் நேற்று திருவனந்தபுரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறுகையில் மக்களுக்கு எதிரான கொள்கைகளை கடைப்பிடித்து வரும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு எதிராக வரும் தேர்தலில் மக்கள் வாக்களிப்பார்கள்.

 ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசானது ஊழலில் சிக்கி தவிக்கிறது. மேலும் கேரள மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் பலர் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி உள்ளாகியுள்ளனர். கேரள மாநிலத்தில் காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டபோது உள்கட்சி பூசல் அம்பலமாகியுள்ளது. இது மேலும் அதிகரிக்கும். காங்கிரசில் பலர் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கியிருக்கிறார்கள் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கே.கே.ராமசந்திரனே கூறியுள்ளார் என்றும் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்