முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீடு விவகாரம் மன்மோகன்சிங் மீது கிரண்பேடி கடும்தாக்கு

ஞாயிற்றுக்கிழமை, 10 ஜூன் 2012      இந்தியா
Image Unavailable

புதுடில்லி, ஜூன்.- 11 - நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீடு விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கை அண்ணா ஹசாரே குழுவில் உள்ள கிரண்பேடி கடுமையாக தாக்கி பேசியுள்ளார். நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீட்டில் ஊழல் நடந்திருக்கிறது மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் அமைச்சரவையில் உள்ள 16 அமைச்சர்கள் ஊழல் புரிந்துள்ளனர். இது குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணை குழுவை அமைக்க வேண்டும் என்று அண்ணா ஹசாரே குழுவினர் வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் ஹசார கடிதம் எழுத்தியுள்ளார். ஆனால் சிறப்பு விசாரணை குழு அமைக்க முடியாது என்று பிரதமர் அலுவலகம் பதில் கடிதம் எழுதியுள்ளது. மேலும் பிரதமர் மன்மோகன் சிங் பரிசுத்தமானவர் என்றும் அந்த பதில் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இதற்கு அண்ணா ஹசாரே குழுவில் உள்ள கிரண்பேடி கடுமையாக தாக்கி பேசியுள்ளார். பிரதமர் அலுவலகத்தின் இந்த பதில், அரச சபையில் திரெளபதியை கெளரவர்கள் துயில் உரிந்தபோது அதை திருதராஷ்டிரன் கண்ணை மூடிக்கொண்டு இருந்தது மாதிரியாகும் என்றும் கிரண்பேடி உதாரணமாக கூறியுள்ளார். இதுதான் இந்தியாவின் கலாசாரமா? என்றும் கிரண்பேட் கேள்வி எழுப்பியுள்ளார். மத்தியில் காங்கிரஸ் கட்சிதான் ஆட்சியில் உள்ளது. அந்த கட்சியால்தான் ஊழலுக்கு எதிராக வலுவான சட்டம் கொண்டுவர முடியும். எதிர்க்கட்சிகளால் முடியாது. அதனால்தான் நாங்கள் ஆளும் காங்கிரஸ் கட்சி மீது கவனத்தை திருப்பியுள்ளோம். ஹசாரேவுக்கு பிரதமர் அலுவலகம் எழுதியுள்ள கடிதமானது வெறும் கண்துடைப்புதான் என்றும் அர்த்தம் இல்லாதது என்றும் அதனால் திட்டமிட்ட படி வருகின்ற ஜூலை 25-ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தை மேற்கொள்ளப்போவதாகவும் கிரண்பேடி மேலும் கூறினார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago