முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எஸ்.எம்.கிருஷ்ணா ஜூலை 17-ல் பாகிஸ்தான் செல்கிறார்

திங்கட்கிழமை, 11 ஜூன் 2012      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,ஜூன்.- 11 - இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா அடுத்தமாதம் 17-ம் தேதி பாகிஸ்தான் செல்கிறார். அங்கு அந்த நாட்டு வெளியுறவுத்துறை பெண் அமைச்சர் ஹினா ரப்பானி ஹர்வை சந்தித்து பேசுகிறார். இந்தியா மீது பாகிஸ்தான் தீவிரவாதிகளை ஏவிவிட்டு தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தையை இந்தியா நிறுத்திக்கொண்டது. இருந்தபோதிலும் அமெரிக்காவின் வற்புறுத்தல் மற்றும் இந்தியாவின் விட்டுக்கொடுக்கும் பெருந்தன்மையால் மீண்டும் இருநாடுகளிடையே பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹினா ரப்பானி கடந்தாண்டு புதுடெல்லி வந்து வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவை சந்தித்து பேசினார். அதனையடுத்து அடுத்தமாதம் கிருஷ்ணா பாகிஸ்தான் செல்கிறார். அநேகமாக ஜூலை 17-ம் தேதி இஸ்லாமாபாத்திற்கு கிருஷ்ணா சென்று ஹினாவை சந்தித்து பேசுவார் என்றும் இந்த பேச்சுவார்த்தை இரண்டு நாட்கள் நடக்கலாம் என்றும் தெரிகிறது. இந்த பேச்சுவார்த்தையின் போது மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதில் இருநாடுகளிடையே உள்ள உறவு மற்றும் பிரச்சினைகளுக்கு தீர்வு ஆகியவற்றில் எவ்வளவு முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது என்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என்று தெரிகிறது. இந்த இரண்டு அமைச்சர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்பு இருநாடுகளின் வெளியுறவு செயலாளர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இருநாடுகளிடையே தற்போது நிலவும் சூழ்நிலை திருப்திகரமாக உள்ளது. இருநாடுகளிடையே இருந்த அவநம்பிக்கையில் ஓரளவு குறைந்துள்ளது என்று இந்தியாவுக்கான பாகிஸ்தான் ஹைகமிஷனர் ஷகித் மாலிக் தெரிவித்தார். இந்த சூழ்நிலையை இரு நாடுகளும் பயன்படுத்தி அமைதி நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் மாலிக் மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்