முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கிகளின் தலைவர்களை மந்திரி பிரணாப் நாளை சந்தித்து பேசுகிறார்

திங்கட்கிழமை, 11 ஜூன் 2012      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,ஜூன்.- 11 - நாட்டின் பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருக்கின்ற சூழ்நிலையிலும் வங்கிகளுக்கு வராக்கடன் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாலும் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு தீர்வுகாணுவது குறித்து பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களை மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி நாளை சந்தித்து பேசுகிறார். அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகள் மட்டுமல்லாது உலகம் முழுவதும் பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளது. இது இந்தியாவையும் பாதித்துள்ளது. இந்தியாவில் உற்பத்தி குறைந்ததோடு அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. மக்களின் வருவாய் குறைந்துள்ளது. இதனால் வங்கிகளுக்கு வராக்கடன் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேலும் பாதிக்கும். உற்பத்தி அடிப்படையான தொழில்களுக்கும் உள்கட்டமைப்பு வசதிகளை பெருக்குவதற்கும் முதலீடு செய்ய முடியாத சூழ்நிலை ஏற்படும். இதை தடுப்பது குறித்து ஆலோசிக்க பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களை நாளை டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின்போது உற்பத்தி துறைக்கு கடன் அளிப்பது தொடர்பாகவும் நடப்பு நிதியாண்டில் வங்கிகளின் சேவை அதனால் ஏற்பட்டுள்ள பயன் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. நாட்டில் உள்கட்டமைப்பு வசதிகள் அதிகரித்து இருப்பதாலும் சந்தை வசதிகள் ஏற்பட்டிருப்பதாலும் கிராமப்புறங்களில் வங்கி சேவை தேவைப்படுகிறது. அதனால் வங்கி வசதி இல்லாத அதேசமயத்தில் தேவையான பகுதிகளில் புதியதாக வங்கி கிளைகள் திறப்பது, தனியார் வங்கிகளின் நிதியுதவியால் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. முடங்கிக்கிடக்கும் சொத்துக்கள், விவசாய கடன், உள்கட்டமைப்பு துறைக்கு கடன், பொதுத்துறை வங்கிகளில் மனித ஆதாரம் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. 2012-13-ம் ஆண்டில் விவசாய கடன் ரூ. 5 லட்சத்து 75 ஆயிரம் கோடி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்தாண்டை விட ரூ.ஒரு லட்சம் கோடி அதிகமாகும்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்