முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரள அரசு அலுவலகங்களில் செல்போன் பயன்படுத்ததடை

திங்கட்கிழமை, 11 ஜூன் 2012      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம், ஙீஜுன் - 11- கேரளாவில் அரசு அதிகாரிகள் அலுவலகத்திற்குள் செல்போனை பயன்படுத்தக்கூடாது  என்று அம்மாநில அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அலுவலக நேரத்தில் அதிகாரிகள் தங்களது சொந்த விஷயங்களை செல்போனில் பேசுவதால் அலுவலக வேலைக்காக தொடர்பு கொள்ள முடியவில்லை என்று பொதுமக்கள் பலர் புகார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து கேரள பொதுத்துறை பிறப்பித்துள்ள உத்தரவில், அரசு அலுவலகங்களில் அலுவலக நேரத்தில் செல்போன் பயன்படுத்தப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டியது அந்தந்த துறைத் தலைவர்களின் பொறுப்பாகும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இதற்கு அதிகாரிகளிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.  அவசர காலங்களில் மட்டும் செல்போனை அதிகாரிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அரசு கூறுகிறது. செல்போனில் பேசாமல் இருக்கும்போது அவசர காலத்தை எப்படி முடிவு செய்ய முடியும் என்பது அவர்களின் கேள்வி. இந்த உத்தரவின் நோக்கம் சரியானதுதான். ஆனால் நடைமுறை சாத்தியமில்லாதது என்பது அரசு ஊழியர்களின் கருத்து. பான்பராக், குட்கா, சூப்பர், மாவா போன்ற போதைப் பொருட்களுக்கு அண்மையில் கேரள அரசு தடை விதித்திருந்தது. இப்போது செல்போனுக்கும் அரசு அலுவலகங்களில் தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்