நித்யானந்தா கோர்ட்டில் சரண்: சிறையில் அடைக்கப்பட்டார்

புதன்கிழமை, 13 ஜூன் 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

பெங்களூர்,ஜூன்.14 - பாலியல், பத்திரிகையாளர்களை தாக்கப்பட்டதாக தொடரப்பட்டுள்ள வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த நித்யானந்தா நேற்று ராம்நகர் கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை உடனடியாக சிறையில் அடைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

சுவாமி நித்யானந்தாவுக்கு கர்நாடக மாநிலம் பிடதியில் ஆசிரமம் தியானபீடமும் உள்ளது. இவருக்கு உலகம் முழுவதும் பக்தர்கள் உள்ளனர். கோடிக்கணக்கான அளவுக்கு சொத்து உள்ளது. வெளிநாடுகளிலும் ஆசிரமம் பெயரில் சொத்து உள்ளது. இவரது போதனைகளை கேட்க தினமும் பிடதி மடத்திற்கு ஆயிரக்கணக்கான பெண்களும் ஆண்களும் வந்து செல்வர். இந்தநிலையில் இவருக்கும் பிரபல நடிகை ரஞ்சிதாவுக்கும் பாலியல் தொடர்பு இருக்கிறது என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து தொலைக்காட்சிகளிலும் பத்திரிகைகளிலும் செய்திகள் வெளியாகின. இதனையொட்டி நித்யானந்தா மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீனில் வெளிவந்த நித்யானந்தா தனது பணிகளை மீண்டும் தொடர்ந்தார். அவர் மீது வழக்கு இன்னும் நடந்து வருகிறது. 

நித்யானந்தா மீது களங்கம் ஏற்பட்டிருக்கும் நேரத்தில் மதுரை இளை ஆதீனமாக நியமிக்கப்பட்டார். இதற்கு மடாதிபதிகள், இந்துமத அமைப்புகள், பொதுமக்கள் ஆகியோர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. நித்யானந்தா மீது மீண்டும் பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. அமெரிக்க பெண் ஒருவர் கூறியுள்ள புகாரில் நித்யானந்தா கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக தமக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்து வருவதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில் கடந்த 8-ம் தேதி பிடதி ஆசிரமத்தில் நிருபர்களுக்கு நித்யானந்தா பேட்டி கொடுத்தார். பேட்டியின்போது அமெரிக்க பெண் கொடுத்துள்ள பாலியல் புகார் குறித்து நிருபர்கள் கேள்வி கேட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த நித்யானந்தாவும் அவரது ஆசிரம ஊழியர்களும் ஒரு தனியார் தொலைக்காட்சி நிருபரை அடித்து தாக்கினர். அப்போது நித்யானந்தா மற்றும் அவரது ஆசிரம ஊழியர்களுடன் பத்திரிகையாளர்கள் கர்நாடக நவ நிர்மான்சேவாஇயக்கத்தினர் ஆகியோர் மோதலில் ஈடுபட்டனர். இருதரப்பினரும் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் நித்யானந்தா உள்பட இருதரப்பினர்கள் மீதும் வழக்கு பதிவு செய்தனர். நித்யானந்தா மீது மீண்டும் பாலியல் குற்றச்சாட்டு மற்றும் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதையொட்டி அவரை கைது செய்யும்படியும் பிடதி மடத்திற்கு சீல் வைத்து அரசு கையகப்படுத்தவும் சதானந்தா கவுடா உத்தரவிட்டார். இதனையொட்டி நித்யானந்தா தலைமறைவாகிவிட்டதோடு பெங்களூர் ஐகோர்ட்டில் தமக்கு முன் ஜாமீன்கோரி மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று நடந்தது. அப்போது தீர்ப்பு அளிப்பதை கோர்ட்டு ஒத்திவைத்துவிட்டது. 

இதனையொட்டி கடந்த 48 மணி நேரமாக அங்குமிங்கும் பெண்வேடமிட்டு ஒளிந்து திரிந்த நித்யானந்தா நேற்று பெங்களூரில் உள்ள ராம்நகர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரை ஒரு நாள் சிறையில் அடைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். மேலும் நித்யானந்தா ஜாமீன் மனுத்தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார். அதேசமயத்தில் பிடதி ஆசிரமத்தில் நேற்று இரண்டாவது நாளாக போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நித்யானந்தா நடவடிக்கைகள் குறித்து பல முக்கிய தகவல்கள் கிடைத்திருப்பதாக தெரிகிறது.

Sathu Maavu | Health mix | BABY FOOD for 7 Months old | குழந்தைகளுக்கு சத்து மாவு

KFC Style Fried Chicken Recipe in Tamil | KFC Style Fried Chicken at Home | English Subtitles

Apple Halwa Recipe in Tamil | ஆப்பிள் அல்வா | Halwa Recipe in Tamil | Sweet Recipe

Star Hotel Tandoori Chicken Recipe in Tamil | தந்தூரி சிக்கன் | Chicken Recipe

Paruppu Payasam Recipe in Tamil | பாசி பருப்பு பாயாசம் | Moong Dal Payasam Recipe| Sweet Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்: