முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திர ஐகோர்ட்டு உத்தரவுக்கு தடைவிதிக்க மறுப்பு

புதன்கிழமை, 13 ஜூன் 2012      அரசியல்
Image Unavailable

 

புதுடெல்லி, ஜுன்14 - சிறுபான்மையினருக்கு 4.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் அரசு உத்தரவை ரத்து செய்து ஆந்திர ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது. அரசு கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்க ஏற்கனவே மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இந்த 27 சதவீத இட ஒதுக்கீட்டில் சிறுபான்மை வகுப்பினருக்கு உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு 4.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க அரசு ஆணை பிறப்பித்தது. இந்த ஆணையை எதிர்த்து ஆந்திர ஐகோர்ட்டில் பொது நல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுமீது விசாரணை நடத்திய ஆந்திர ஐகோர்ட்டு சிறுபான்மையினருக்கு 4.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் அரசு ஆணையை ரத்து செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு சார்பில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மேல் முறையீட்டு மனு மீது சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ஜே.எஸ்.கேஹார் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரணை நடத்தி மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து மத்திய அரசு இந்த உள் ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக தனது பதில் மனுவை தாக்கல் செய்தது. இந்த பதில் மனு மீது விசாரணை நடத்திய சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், சிறுபான்மையினருக்கு 4.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்து ஆந்திர ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்று நீதிபதிகள் கூறிவிட்டனர். மேலும் இந்த வழக்கில் பொதுநல வழக்கு தொடர்ந்த மனுதாரருக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago