ஸ்ரீரங்கத்தில் 64 பேர் தீயில் கருகி இறந்த கோரவிபத்தில் தீர்ப்பு

புதன்கிழமை, 13 ஜூன் 2012      தமிழகம்
Image Unavailable

 

திருச்சி ஜூன் 14 - ஸ்ரீரங்கத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 64 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 33 பேருக்கு பயங்கர தீக்காயம் ஏற்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை கடந்த 8 வருடமாக நடந்து வந்த நிலையிைல் திருச்சி முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கி உள்ளது. கடந்த 2004ம் ஆண்டு ஜனவரி 23தேதி இந்தியாவையே உலுக்கிய கோர தீவிபத்து தமிழகத்தில் அதுவும் திருவரங்கத்தில் நடந்தது. திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கா நகரில் இ.வி. ஸ்ரீநிவாச்சாரி சாலையில் உள்ளது பத்மபிரியா திருமண மண்டபம். 23. 01.2004 காலை 9.15 மணிக்கு நியூ இண்டியா அஸ்யுரன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஆர். குருராஜன் (வயது 40) என்பவருக்கும் அதேப்பகுதியை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை எச்.ஜெயஸ்ரீ (வயது 32) என்பவருக்கும் திருமண நடைபெற இருந்தது. இருவீட்டை சேர்ந்த உறவினர்கள் நண்பர்கள் என 400க்கும் மேற்பட்டவர்கள் அங்கு குழுமியிருந்தனர். திருமண மண்டபம் சிறியதாக இருந்ததால் மொட்டைமாடியில் தென்னங்கீற்றுப்பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. அதன்கீழ் மணமேடை அமைக்கப்பட்டிருந்தது. மண்டபத்தில் இருந்த அனைவரும் சிரித்த முகத்துடன் கலகலப்பாக பேசி கொண்டிருந்தனர். சரியாக காலை 9.15 மணிக்கு மணமகன் குருராஜன் மனதில் பல்வேறு கனவுகளுடன் மங்கல நாணை மணமகள் கழுத்தில் கட்ட ஆயத்தமானார். 

அதுவரை மகிழ்ச்சி கடலில் திளைத்த உறவினர்கள் மத்தியில் திடீரென மரண ஓலம் எழுந்தது. அனைவரும் அலறி அடித்துக்கொண்டு அங்கும் இங்கும் ஓடினர். மணக்கோலம் மாறி எங்கும் பிணக்குவியல்கள். புரோகிதர் ஓமகுண்டத்திலிருந்து எழுந்த தீயா? அல்லது வீடியோ கிராபர் லைட்டிலிருந்து எழுந்த தீயா? என தெரியாத நிலையில் மண்டபத்தின் மேல் வேயப்பட்டிருந்த தென்னங்கீற்று பந்தலில் எழுந்த தீ ருத்ர தாண்டவம் ஆடியதில் 2 2 குழந்தைகள் உள்பட 23 பெண்களும் 27 ஆண்களும் உயிரிழந்தனர். 

இதில் மணமகன் குருராஜனும் பரிதாபமாக பலியானார். 40க்கும் மேற்பட்டோர் தீயின் வெப்பம் தாக்கி படுகாயம் அடைந்தனர். இறந்த உடல்கள் அனைத்தும் மீட்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் காயம்அடைந்த அனைவரும் திருச்சியில் உள்ள பல்வேறு மருத்துவமனைககளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அப்போதைய திருச்சி மாவட்ட கலெக்டர் கே.மணிவாசகம், திருச்சி சரக காவல்துறை தலைவர் எஸ்.ஜார்ஜ், துணைத்தலைவர் சுனில் குமார் சிங் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்கு பின்னர் மண்டப மேலாளர் எஸ். சடகோபன், வீடியோ லைட் பாய் ஆர்.பாலாஜி, எலக்ட்ரீசியன் கே.முருகேசன், பந்தல் அமைப்பாளர் எம்.செல்வம் ஆகியோர் இந்தியன் எலக்ட்ரிசிட்டி ஆக்ட் 39 கீழ் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கின் மீதான தீர்ப்பை முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் நேற்று மாலை 4.35 மணிக்கு தீர்ப்பை வழங்கினார். 

தீர்ப்பு விபரம் வருமாறு:- இவ்வழக்கில் மொத்தம் 6 எதிரிகள் இதில் மூன்றாவது எதிரியான பந்தல் அமைப்பாளர் செல்வம் இறந்து விட்டார். முதல் குற்றவாளி தர்மராஜிக்கு 1 வருட கடுங்காவல் தண்டனையும் 9700 ரூபாய் அபராதமும், இரண்டாவது குற்றவாளியான பாலாஜீக்கு 1 வருட கடுங்காவல் தண்டனையும் 10700 ரூபாய் அபராதமும், நான்காவது எதிரியான திருமண மண்டப அதிபர் இராமசாமிக்கு இரண்டு வருட கடுங்காவல் தண்டனையும் 1400 ரூபாய் அபராதமும், மேலும் இவர் இறந்த 64 குடும்பத்தினருக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும், தீக்காயம் அடைந்த 33 பேருக்கு தலா 10 ஆயிரம் ரூபாயும் இழப்பீடு வழங்க வேண்டும். 

5வது எதிரியான சடகோபனுக்கு ஒரு வருட கடுங்காவல் தண்டனையும் 11,100 ரூபாய் அபராதமும் 

6 வது எதிரியான செல்வம் என்ற பெரியசாமிக்கு 6 மாத கடுங்காவல் தண்டனையும் 11.000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

வருங்காலத்தில் இதுபோன்ற மோசமான தீவிபத்தோ அல்லது மற்ற நிகழ்வுகளோ நடக்க கூடாது என்பதற்காக திருச்சி மாநகராடசிக்கு உட்பட்ட அனைத்து திருமண மண்டபங்கள் மற்றும் பொதுமக்கள் கூடக்கூடிய இடங்கள் ஆகியவற்றை திறமை வாய்ந்த நிபுணர்களை கொண்டு ஒரு குழு அமைத்து 3 மாத காலத்திற்குள் மாநகராட்சிக்கு உட்பட்ட திருமண மண்டபங்கள், மற்றும் அதிக அளவில் பொதுமக்கள் கூடும் இடங்களை ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை 3 மாத காலத்திற்குள்ளாக தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

Sathu Maavu | Health mix | BABY FOOD for 7 Months old | குழந்தைகளுக்கு சத்து மாவு

KFC Style Fried Chicken Recipe in Tamil | KFC Style Fried Chicken at Home | English Subtitles

Apple Halwa Recipe in Tamil | ஆப்பிள் அல்வா | Halwa Recipe in Tamil | Sweet Recipe

Star Hotel Tandoori Chicken Recipe in Tamil | தந்தூரி சிக்கன் | Chicken Recipe

Paruppu Payasam Recipe in Tamil | பாசி பருப்பு பாயாசம் | Moong Dal Payasam Recipe| Sweet Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்: