முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திர இடைத்தேர்தலில் 18க்கு 15 இடங்கள் ஜெகனுக்கே...!

புதன்கிழமை, 13 ஜூன் 2012      இந்தியா
Image Unavailable

 

ஐதராபாத், ஜுன் 14 - ஆந்திர மாநில சட்டசபைக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றிபெறும் என்று வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஆந்திராவில் கடந்த 12ம் தேதி 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் நெல்லூர் லோக்சபா தொகுதிக்கும் இடைத்தேர்தல்கள் நடைபெற்றன. இந்த இடைத் தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும் காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து தனிக்கட்சியாக செயல்படும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மறைந்த ஆந்திர மாநில முதல்வர் ஒய்.ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டியால் துவங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஜெகன்மோகன் ரெட்டி சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் நிலையில் இந்த இடைத்தேர்தல் நடைபெற்றுள்ளது. 

இந்நிலையில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளின் படி இடைத்தேர்தல் நடைபெற்ற 18 சட்டமன்ற தொகுதிகளில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 15 இடங்களை கைப்பற்றும் என்றும், மேலும் நெல்லூர் பாராளுமன்ற தொகுதியையும் அக்கட்சியே கைப்பற்றும் என்றும் கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன. காங்கிரஸ், தெலுங்குதேசம், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சிகள் தலா ஒரு இடத்தில் வெற்றிபெறும் என்றும் கருத்துக் கணிப்புகள் மூலம் தெரியவந்துள்ளது. காங்கிரஸ் கட்சியில் பிரிந்து வந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி காங்கிரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்