முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு: சோனியா ஆலோசனை

வியாழக்கிழமை, 14 ஜூன் 2012      அரசியல்
Image Unavailable

 

புதுடெல்லி,ஜூன்.15 - ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு தொடர்பாக மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஏ.கே. அந்தோணி ஆகியோருடன் சோனியா காந்தி நேற்று ஆலோசனை நடத்தினார். ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளரை காங்கிரஸ் எந்த நேரத்திலும் அறிவிக்கலாம் என்று தெரிகிறது. ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்வதில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. பிரதமர் மன்மோகன் சிங்கை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்குவங்க முதல்வருமான மம்தாபானர்ஜி அறிவித்துள்ளார். இதற்கு காங்கிரஸ் கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுக்கும் சமாஜ்வாடி கட்சி ஆதரவு கொடுத்துள்ளது. இதனால் வேட்பாளரை தேர்வு செய்வதில் காங்கிரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி தலைவர்களும் மத்திய அமைச்சர்களுமான பி.சிதம்பரம், ஏ.கே. அந்தோணி ஆகியோர்களை அழைத்து சோனியா காந்தி சந்தித்து பேசினார். மேலும் தி.மு.க. எம்.பி. டி.ஆர். பாலுவும் சோனியா காந்தியை நேற்று சந்தித்து பேசினார். இதையெல்லாம் பார்க்கும்போது ஜனாதிபதி வேட்பாளராக யாரை அறிவிக்கலாம் என்பது குறித்து அவர்களுடன் சோனியா காந்தி ஆலோசனை நடத்தியிருக்கலாம் அல்லது வேட்பாளரை தேர்வு செய்து இருக்கலாம். வேட்பாளரை அறிவிக்கும் முன்பு அமைச்சர்களுக்கு தெரிவிப்பதற்காக அவர்களை சோனியா காந்தி அழைத்து பேசியிருக்கலாம் என்று தெரிகிறது. காங்கிரஸ் கூட்டணி அறிவிக்கும் வேட்பாளருக்கு ஆதரவு கொடுப்போம் என்று ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சி தலைவர் லல்லு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்