முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனாதிபதி பதவிக்கு போட்டி குறித்து பரிசீலனை

வியாழக்கிழமை, 14 ஜூன் 2012      அரசியல்
Image Unavailable

 

லண்டன்,ஜூன்.15 - ஜனாதிபதி பதவிக்கு தம்மை வேட்பாளராக ஒரு சில கட்சிகள் சிபாரிசு செய்திருப்பதற்கு சோமநாத் சாட்டர்ஜி ஆச்சரியத்தை தெரிவித்துள்ளார். பெரும்பாலான கட்சிகளிடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டால் போட்டியிடுவது குறித்து பரிசீலனை செய்வேன் என்றும் அவர் கூறியுள்ளார். மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி முதல் தடவை ஆட்சியில் இருந்தபோது அரசுக்கு இடதுசாரி கட்சிகள் ஆதரவு கொடுத்து வந்தன. அமெரிக்காவுடன் இந்தியா அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இடதுசாரி கட்சிகள் ஆதரவை வாபஸ் பெற்றுக்கொண்டன. அப்போது லோக்சபை சபாநாயகர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்று இடதுசாரி கட்சிகள் குறிப்பாக இடது கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொண்டது. அதை சமாநாத் சாட்டர்ஜி நிராகரித்துவிட்டார். இதனையொட்டி அவர் இடது கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அவரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தலாம் என்று திரிணாமூல் காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சியும் ஆலோசனை கூறியுள்ளன. இதற்கு சோமநாத் சாட்டர்ஜி ஆச்சரியம் தெரிவித்துள்ளார். தற்போது லண்டனில் இருக்கும் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் ஜனாதிபதி வேட்பாளர் பதவிக்கு தம் பெயரை திரிணாமூல் காங்கிரசும் சமாஜ்வாடி கட்சியும் சிபாரிசு செய்திருப்பது தமக்கு ஆச்சரியம் அளிக்கிறது. பெரும்பாலான முக்கிய கட்சிகள் ஒருமித்த கருத்துடன் தமக்கு ஆதரவு கொடுத்தால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து பரிசீலனை செய்வேன் என்றும் கூறியுள்ளார். நான் கண்ணியமானவராக இருப்பேன் என்றும் சோமநாத் சாட்டர்ஜி தெரிவித்தார். காங்கிரஸ் கூட்டணி சார்பாக முதலில் வேட்பாளரை அறிவிக்கட்டும். அதன் பின்னர் தங்கள் நிலை என்ன என்பதை அறிவிப்போம் என்று இடதுசாரி கட்சிகள் தெரிவித்துள்ளன. இதை கருத்தை பாரதிய ஜனதாவும் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்