முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்டாலின் மருமகள் பெயரில் `குரல்' மோசடி

வியாழக்கிழமை, 14 ஜூன் 2012      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஜூன்.15 - பிரபல சினிமா தயாரிப்பாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் மனைவி கிருத்திகா பெயரில் குரல் மோசடி நடப்பதாகவும், இதில் சிக்கி யாரும் ஏமாற வேண்டாம் என்றும் அவரது வழக்கறிஞர் பத்திரிகைகளில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். பிரபல சினிமா தயாரிப்பாளரும், நடிகரும், திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா. கிருத்திகா முன்பு பல குறும்படங்களை இயக்கியவர். இதற்காக ஜெயப்ர் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த குறும்பட இயக்குனருக்கான விருதினை பெற்றுள்ளார்.

இந்த அதிர்ச்சி தரும் அறிவிப்பிலிருந்து ஸ்டாலின் மருமகள் பெயரில் பல மோசடிகள் நடத்திருப்பது தெரிய வருகிறது. இதுகுறித்து போலீசில் புகார் செய்தாலோ, விவரங்களை வெளியிட்டாலோ ஸ்டாலின் குடும்பத்திற்கு பல பிரச்சனைகள், நெருக்கடிகள் ஏற்படும் என்பதால் இந்த விவகாரங்களை கருணாநிதியின் ஆசீர்வாதத்தோடு, அப்படியே அமுக்கி விட்டார்கள் என்று தெரிய வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்