நித்யானந்தா ஜாமீனில் விடுதலை: மேலும் ஒரு வழக்கு

வெள்ளிக்கிழமை, 15 ஜூன் 2012      ஆன்மிகம்
Image Unavailable

பெங்களூர், ஜுன் 15 - இரண்டு வழக்குகளில் கைது செய்யப்பட்ட நித்யானந்தாவுக்கு நேற்று ராம்நகர் கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. இருந்தாலும் அவர்மீது மேலும் ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. சாமியார் நித்யானந்தா சமீபத்தில் கர்நாடகாவில் உள்ள ராம்நகரில் உள்ள தனது பிடதி ஆசிரமத்தில் செய்தியாளர்களுக்கு  பேட்டியளிதார். அப்போது அவரது ஆதரவாளர்களுக்கும் செய்தியாளர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதேபோல கர்நாடக அமைப்புகளைச் சேர்ந்த சிலர் நித்யானந்தா ஆசிரமத்திற்கு முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நித்யானந்தா ஆதரவாளர்களுக்கும் அவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த இரு சம்பவங்கள் தொடர்பாக நித்யானந்தா மீது போலீசார் இரண்டு வழக்குகளை பதிவு செய்திருந்தனர். இதையடுத்து நித்யானந்தா கோர்ட்டில் சரணடைந்தார். அவரை நீதிமன்ற காவலில் வைக்க ராம்நகர் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி அவர் நேற்று முன்தினம் சிறையில் அடைக்கப்பட்டார். நேற்று அவர் தனக்கு ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை ஏற்றுக்கொண்ட ராம்நகர் கோர்ட்டு அவருக்கு ஜாமீன் வழங்கியது. இதையடுத்து கோர்ட்டில் இருந்து நித்யானந்தாவை போலீசார் வெளியே அழைத்துவந்தபோது நித்யானந்தாவுக்கு எதிராக பொதுமக்கள் கோஷங்களை எழுப்பினர். அப்போது போலீஸ் வாகனங்கள் மீது கற்கள் வீசப்பட்டன. இதையடுத்து பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக நித்யானந்தா மீது போலீசார் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால் இந்த வழக்கு எளிதில் ஜாமீன் பெறக்கூடிய பிரிவுக்கு உட்பட்டது என்று வக்கீல்கள் கூறியுள்ளனர். 

Sathu Maavu | Health mix | BABY FOOD for 7 Months old | குழந்தைகளுக்கு சத்து மாவு

KFC Style Fried Chicken Recipe in Tamil | KFC Style Fried Chicken at Home | English Subtitles

Apple Halwa Recipe in Tamil | ஆப்பிள் அல்வா | Halwa Recipe in Tamil | Sweet Recipe

Star Hotel Tandoori Chicken Recipe in Tamil | தந்தூரி சிக்கன் | Chicken Recipe

Paruppu Payasam Recipe in Tamil | பாசி பருப்பு பாயாசம் | Moong Dal Payasam Recipe| Sweet Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்: