முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இடைத் தேர்தலை சமாஜ்வாடி விரும்பவில்லை!

வெள்ளிக்கிழமை, 15 ஜூன் 2012      அரசியல்
Image Unavailable

 

புது டெல்லி, ஜூன். 16 - திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியும், சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவும், இடைத் தேர்தலை விரும்புவதாக யூகச் செய்திகள் வெளியாகி உள்ள நிலையில் அவ்வாறு இடைத் தேர்தலை விரும்பவில்லை என்று சமாஜ்வாடி கட்சி தெளிவுபடுத்தி உள்ளது. அது போன்ற ஒரு சூழ்நிலையை நாங்கள் விரும்பவில்லை என்றும், இருப்பினும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் இணையப் போவதில்லை என்றும் அக்கட்சி தெளிவுபடுத்தி உள்ளது. இது குறித்து அந்த கட்சித் தலைவர் ஒருவர் கூறுகையில், 

மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் நாங்கள் ஒருபோதும் இணைய மாட்டோம். அதே நேரம் இடைத் தேர்தலையும் விரும்ப மாட்டோம் என்று தெள்ளத்தெளிவாக தெரிவித்தார். காரணம், இடைத் தேர்தல் நடத்தப்பட்டால் மக்களுக்கு தேவையற்ற, விரும்பத்தகாத, நிதிச்சுமை ஏற்படும். அதன் காரணமாக நாங்கள் இடைத் தேர்தலை ஒருபோதும் விரும்ப மாட்டோம் என்று தெள்ளத்தெளிவாக தெரிவித்தார். ஜனாதிபதி வேட்பாளர் விஷயத்தில் காங்கிரசுக்கும், மம்தா பானர்ஜிக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது தெரிந்ததே. அப்துல் கலாம்தான் எங்கள் வேட்பாளர் என்று மம்தா பானர்ஜி அறிவித்து விட்டார். ஆனால் இதை ஏற்றுக் கொள்ள சோனியா தயாராக இல்லை. மன்மோகன்சிங்கை ஜனாதிபதி வேட்பாளராக்க வேண்டும் என்ற யோசனையையும் காங்கிரஸ் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. மன்மோகன்சிங் பிரதமராகவே நீடிப்பார் என்று காங்கிரஸ் அறிவித்து விட்டது. ஜனாதிபதி வேட்பாளர் விஷயத்தில் மம்தா கட்சியும், முலாயம்சிங் கட்சியும் தெரிவிக்கும் யோசனைகளை காங்கிரஸ் ஏற்பதாக தெரியவில்லை. இதனால் காங்கிரசுக்கும் இந்த கட்சிகளுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. அதனால் இடைத்தேர்தல் வரலாம் என்ற பேச்சு அடிபட்டது. ஆனால் அதையும் விரும்பவில்லை என்று கூறி விட்டது சமாஜ்வாடி கட்சி. அடுத்து என்ன நடக்குமோ தெரியவில்லை.  இப்படியாக ஜனாதிபதி வேட்பாளர் விஷயத்தில் கடுமையான குழப்பம் நிலவி வரும் சூழ்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி நேற்று இது பற்றி ஆலோசித்தது. களத்தில் இருக்கும் அத்தனை வேட்பாளர்கள் பற்றியும் தே.ஜ. கூட்டணி நேற்று விரிவாக ஆலோசித்தது. இறுதியில் பொறுத்திருந்து, காத்திருந்து பார்த்த பிறகு இறுதி முடிவு எடுப்பது என்று தே.ஜ. கூட்டணி முடிவு செய்து விட்டதாம். 

முன்னதாக ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக தே.ஜ. கூட்டணி ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டம் சுமார் 90 நிமிடம் நீடித்தது. இதில் தே.ஜ. கூட்டணி தலைவர்கள் கலந்து கொண்டார்கள். இடதுசாரி கட்சிகளும், தங்கள் நிலை பற்றி கொல்கத்தாவில் நேற்று மாலை நீண்ட நேரம் விவாதித்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்