முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழம் பெரும் நடிகர் காகா ராதாகிருஷ்ணன் உடல் தகனம்

சனிக்கிழமை, 16 ஜூன் 2012      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஜூன்.16 - பழம் பெரும் நடிகர் காகா ராதாகிருஷ்ணன் உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 86. நடிகர் காகா ராதாகிருஷ்ணன் 1949 ம் ஆண்டு மங்கையர்கரசி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து சந்திர கிரி, உத்தமப்புத்திரன், தாய் மகளுக்கு கட்டியதாலி, தாய்க்குபின் தாரம், வந்ததாளே மகராசி, தேவர் மகன், வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். என தமிழ், தெலுங்கு, மலையாளம் என 600 படங்களுக்கு மேல் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

சினிமாவில் நடிப்பதற்கு முன்பு என்.எஸ்.கிருஷ்ணன் நவாப் ராஜமாணிக்கம், எஸ்.வி.சகஸ்ரநாமம் ஆகியோரின் நாட்டிய சபாவில் 7 வயதில் நடக்கத் தொடங்கி ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ளார்.

இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். 2 மகன்கள், 4 மகள்கள் இருக்கிறார்கள். ராதாகிருஷ்ணன் தி.நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரது சொந்த ஊர் திண்டுக்கல் ஆனால் வளர்ந்தது திருச்சி அருகே உள்ள சங்கியாண்டபுரம். பிறகு சென்னைக்கு குடி பெயர்ந்தார்.

காகா ராதாகிருஷ்ணன் கடந்த சில மாதங்களாக முச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் ராதாகிருஷ்ணனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மாலை அவரது இல்லத்தில் உயிர் பிரிந்துள்ளது. 

ராதாகிருஷ்ணன் உடலை பொது மக்கள் பார்வைக்காக தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைத்திருந்தனர். பொது மக்கள் மற்றும் திரை உலகைச் சார்ந்த நடிகர், விவேக், ராஜேஷ், மன்சூர் அலிகான், சிவக்குமார் மற்றும் அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

காகா ராதாகிருஷ்ணனின் உடல் நேற்று மாலை மூன்று மணிக்கு தி.நகரில் உள்ள கண்ணம்மாப்பேட்டை மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago