முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மைசூர் சிறையில் நித்யானந்தா உண்ணாவிரதம்

சனிக்கிழமை, 16 ஜூன் 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

மைசூர், ஜூன். 16 - பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்ததாக கூறிக் கைது செய்யப்பட்டு மைசூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நித்யானந்தா நேற்று முன்தினம் இரவு முதல் சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருந்து வருகிறாராம். கேட்டால் தியானத்தில் இருப்பதாக கூறினாராம். பிடதி ஆசிரமத்தில் ஏற்பட்ட மோதல் மற்றும் பாலியல் புகார் வழக்கில் கைதாகி ஒரு நாள் ராம்நகர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்த நித்யானந்தாவுக்கு ராம்நகர் மாவட்ட நீதிமன்றம் நேற்று முன்தினம் ஜாமீன் அளித்தது. இதையடுத்து கோர்ட்டை விட்டு வெளியே வந்த அவரை பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்ததாக கூறி போலீசார் திடீரென கைது செய்தனர். மேலும் அவரை மாவட்ட கலெக்டர் ஸ்ரீராமரெட்டி முன்பு ஆஜர்படுத்தினர்.

அவரை ஒரு நாள் மைசூர் சிறையில் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டதையடுத்து மைசூர் மத்திய சிறைக்குக் கொண்டு போய் அவரை போலீசார் அடைத்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் இரவு முதல் சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார் நித்யானந்தா. அவர் தியானத்தில் இருப்பதாக கூறியதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று பிற்பகலுக்கு மேல் நித்தியானந்தாவின் வழக்கு மாவட்ட கலெக்டர் முன்பு வருகிறது. அப்போது அவரது சார்பில் வக்கீல்கள் நேரில் ஆஜராகவுள்ளனர். நித்தியானந்தா நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்