முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிகாரி தாக்கப்பட்ட வழக்கு: மு.க.அழகிரி மனு தள்ளுபடி

சனிக்கிழமை, 16 ஜூன் 2012      தமிழகம்
Image Unavailable

மதுரை,ஜூன்.17 - தேர்தல் அதிகாரி தாக்கப்பட்ட வழக்கில் விடுவிக்க கோரிய மத்திய மந்திரி மு.க.அழகிரியின் மனுவை கோர்ட் தள்ளுபடி செய்தது. கடந்த சட்டமன்ற பொது தேர்தலின் போது, மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள வல்லடிக்காரன் கோவிலில் சாமி கும்பிட மத்திய மந்திரி மு.க.அழகிரி தனது ஆதரவாளர்களுடன் சாமி கும்பிட வந்த போது ஏற்பட்ட பிரச்சினையில் தாசில்தார் காளிமுத்து தாக்கப்பட்டார். இது குறித்து கீழவளவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மேலூர் கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் மத்திய மந்திரி மு.க.அழகிரி மற்றும் அவரது 21 ஆதரவாளர்கள் கோர்ட்டில் ஆஜராகி வந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கில் மு.க.அழகிரி உள்பட 21 பேரும் தங்களை விடுவிக்க கோரி மேலூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த  வழக்கு விசாரணை நேற்று வந்தது. மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் ஜெய்குமார், மு.க.அழகிரி உள்பட 21 பேரையும் இந்த வழக்கில் இருந்து விடுவிக்க முடியாது என்று கூறி மனுவை டிஸ்மிஸ் செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!