முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அப்துல் கலாமுக்கு பொதுமக்கள் ஆதரவு குவிகிறது

திங்கட்கிழமை, 18 ஜூன் 2012      இந்தியா
Image Unavailable

 

கோல்கட்டா, ஜூன்.- 18 - ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட அப்துல் கலாமுக்கு பொதுமக்கள் ஆதரவு தெரிவித்து இ.மெயலிலும், எஸ்எம்எஸ் மூலமாகவும் தங்கள் கருத்தை லட்சத்திற்கும் மேற்பட்டோர் தெரிவித்து வருகின்றனர். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட அப்துல் கலாமை நிறுத்துவதில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி உறுதியாக இருக்கிறார். கலாமுக்கு ஆதரவு திரட்டும் வேலையிலும் ஈடுபட்டு வருகிறார். அப்துல் கலாம் பற்றி மம்தா பானர்ஜி இணையதளத்தில் அவர் இந்தியர்களுக்கு எதையாவது சாதிப்பதில் ஊக்கமளிப்பவராக இருக்கிறார். ஜனாதிபதி இப்படித் தான் இருக்க வேண்டும் என்ற மக்களின் எதிர்பார்ப்பை நினைவாக்க அவரால் தான் முடியும். எனவே அவருக்காக நான் குரல் கொடுக்கிறேன். உண்மை வெல்லும் என்ற வலுவான நம்பிக்கையோடு இந்த பயணத்தை தொடர்கிறேன் என்று அதில் குறிப்பிட்டிருக்கிறார். இதனிடையே மம்தா வேண்டுகோளை ஏற்று அப்துல் கலாமுக்கு ஆதரவாக பொது மக்கள் எஸ்எம்எஸ் மூலமாகவும், இ.மெயிலிலும் தங்கள் கருத்தை தெரிவித்துள்ளனர். ஒரே நாளில் பேஸ் புக்கில் 5ஆயிரம் கருத்துக்களும், 35 ஆயிரம் விருப்பங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விருப்பமில்லாமல் இருக்கும் கலாம் மக்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி தனது முடிவை அறிவித்ததும் கலாம் தனது விருப்பத்தை தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜனாதிபதியாக அப்துல் கலாம் தேர்வு செய்யப்படவேண்டும் என வலியுறுத்தி கோல்கட்டாவில் எந்த அரசியல் கட்சியையும் சேராதவர்கள் ஊர்வலம் நடத்தினர். ஆராய்ச்சியாளரும், சர்வதேச அளவில் புகழ்பெற்றவரும், அணு விஞ்ஞானியுமான அப்துல் கலாமே அடுத்த ஜனாதிபதியாகவும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என நாட்டின் பெரும்பான்மையான மக்கள் விரும்புகின்றனர் என்று அப்துல் கலாமுக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்