முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.பி.க்கள்., எம்.எல்.ஏ.க்களுடன் மம்தாபானர்ஜி தீவிர ஆலோசனை

செவ்வாய்க்கிழமை, 19 ஜூன் 2012      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா. ஜூன்.- 19 - தனது கட்சி எம்.பி.க்கள்., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மத்தியில் தனது கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் மற்றும் மாநில அமைச்சர்களுடன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி  நேற்று ஜனாதிபதி வேட்பாளர் குறித்து  தீவிர ஆலோசனை நடத்தினார். வருகிற ஜூலை மாதம் 19 ம் தேதி புதிய  ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளராக மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி நிறுத்தப்பட்டுள்லார். இந்த தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை வேட்பாளராக நிறுத்த மேற்கு வங்க முதல்வரும் திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி முடிவு செய்துள்ளார். அப்துல் கலாமுக்கு ஆதரவு அளிக்கும்படி அனைத்து  கட்சி தலைவர்களுக்கும் அவர் அழைப்பும்  விடுத்துள்ளார்.  இது தொடர்பாக இணையதளத்திலும் அவர்  தனது  விருப்பத்தை தெரிவித்து ஆதரவு திரட்டி வருகிறார். இது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக தனது கட்சியின் எஏம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை  மம்தா பானர்ஜி  நேற்று மாலை கூட்டினார்.
இந்த கூட்டத்தில் திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் மத்திய அமைச்சர்கள் மற்றும் மாநில அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்