முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனாதிபதி வேட்பாளர் குறித்து இன்னும் முடிவாகவில்லை - நிதீஸ்

செவ்வாய்க்கிழமை, 19 ஜூன் 2012      இந்தியா
Image Unavailable

 

பாட்னா.ஜூன்.- 19 - ஜனாதிபதி வேட்பாளர் குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று பீகார் முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்தார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளராக பிரணாப் முகர்ஜி அறிவிக்கப்பட்டுள்ல நிலையில் தங்களது வேட்பாளர் யார் என்பது குறித்து பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

இந்த கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர்களில் ஒருவரும் பீகார் முதல்வருமான நிதீஷ் குமாரிடம் கேட்டதற்கு  இது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றார். வேட்பாளர் யார் என்பது குறித்து கூட்டணி கட்சித்தலைவர்கள் தொடர்ந்து பேசி வருகிறார்கள் என்றும் அவர் கூறினார். மேலும் அவர் கூறுகையில் அப்துல் கலாமை ஆதரிக்க கூட்டணி தலைவர்கள் விரும்பினால் அதற்கு ஐக்கிய ஜனதா தளம் ஆதரவு அளிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்