முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட அப்துல் கலாம் மறுப்பு

செவ்வாய்க்கிழமை, 19 ஜூன் 2012      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி. ஜூன்.- 19 - ஜனாதிபததி தேர்தலில் போட்டியிட தான் விரும்பவில்லை என்று முன்னாள் ஜனதிபதி அப்துல் கலாம் மறுப்பு தெரிவித்துள்ளார். ஜனாதிபதி பிரதீபா பாட்டீலின் பதவிக்காலம் அடுத்த மாதம் 24 ம் தேதியுடன் முடிவடைகிறது. இதை அடுத்து புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் 19 ம் தேதி நடைபெற உள்லது. இதஹ்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தலைமை தேர்தள் கமிஷன் ஏற்கனவே வெளியிட்டு விட்டது. இந்த தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளராக மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி  அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் போட்டியிட வேண்டும் என்று  மேற்கு வங்க முதல்வரும் திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி விருப்பம் தெரிவித்தார். மம்தா பானர்ஜி அறிவித்த  அப்துல் கலாமையே ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தலாம் என்று பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசித்தது. இது குறித்து கலாமின் முடிவை அறிய பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே. அத்வானி ,  அப்துல்  கலாமுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நேற்று 3 முறை பேசினார். ஆனால்  ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட கலாம்  தனது தயக்கத்தை வெளிப்படுத்தினார். இது குறித்து கலாம் நேற்று முறையான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிட விரும்பவில்லை என்று அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார். தற்போதைய அரசியல் சூழல், மற்றும் இந்த விஷயம் குறித்த முழுமைதன்மை ஆகியவற்றை பரிசீலனை செய்த பிறகு  தான் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் குறித்து நாட்டில் என்ன சூழல் நிலவி வருகிறது என்று உங்கள் எல்லோருக்கும் தெரியும். இன்னொரு முறை ஜனாதிபதி ஆவதற்கு நான் ஒரு போதும் விரும்பியதில்லை. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவும் நான்  ஆர்வம் காட்டவில்லை. ஆனால் நான் இந்த தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று மம்தா பானர்ஜியும் இதர அரசியல் கட்சி தலைவர்களும்  தங்களது விருப்பத்தை  தெரிவித்தனர். இதே போல நாட்டில் உள்ள ஏராளமான குடிமக்களும் கூட இதே விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அவர்கள் என் மேல் எவ்வளவு  அன்பும் , நேசமும் வைத்திருக்கிறார்கள் என்பதையும்  நாட்டு மக்கள் எவ்வளவு நேசம் வைத்திருக்கிறார்கள் என்பதையும் இது பிரதிபலிக்கிறது. இந்த பேராதரவை பார்த்து நான் மிகவும் நெகிழ்ந்து போனேன்.
இது அவர்களின் விருப்பம்.அந்த விருப்பத்தை நான் மதிக்கிறேன். என் மேல் அவர்கள் வைத்திருக்கும் இந்த நம்பிக்கைக்காக நான் அவர்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன். இந்த விஷயத்தின் முழுமைத்துவம் , நாட்டில் நிலவும் நடப்பு சூழல் ஆகியவற்றை நான் பரிசீலித்து பார்த்த பிறகு நான் இந்த தேர்தலில் போட்டியிட போவதில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியிருக்கிறார். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட அப்துல் கலாமை சமாதானப்படுத்த பா.ஜ.க.மூத்த தலைவர் எல்.கே. அத்வானி  தனது நெருங்கிய உதவியாளரான சுரேந்திர குல்கர்னியை  அனுப்பி வைத்தார். அவரும் நேற்று இரு முறை கலாமை  சந்தித்து  பா.ஜ.க.விருப்பம் குறித்து எடுத்துக்கூறினார்.ஆனால் அவரது வேண்டுகோளை ஏற்க கலாம் மறுத்து விட்டார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்