முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அப்துல் கலாமுக்கு ஆர்.எஸ்.எஸ். ஆதரவு-மோகன் பகவத்

செவ்வாய்க்கிழமை, 19 ஜூன் 2012      இந்தியா
Image Unavailable

ஹரித்துவார், ஜுன் - 19 - ஜனாதிபதி தேர்தலில் அப்துல்கலாமை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். இயக்கத் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார். ஹரித்துவாரில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் பகவத் கூறியதாவது, ஜனாதிபதியாக அப்துல்கலாமை தேர்ந்தெடுப்பதுதான் சிறந்தது. அவர் இனிமையான எளிமையான மனிதர் என்று பொதுமக்கள் கருதுகின்றனர். தேர்தலில் போட்டியிடப் போவதாக தெரிவித்துவரும் மற்றவர்கள் அனைவருக்கும் அரசியல் பின்னணி உள்ளது. ஆனால் கலாம் அரசியலுக்கு அப்பாற்பட்டவர். நான் எனது கருத்தை தெரிவித்துள்ளேன். மக்கள் பிரதிநிதிகள்தான் ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க முடியும் என்றார் மோகன் பகவத். பிரணாப் முகர்ஜியை எதிர்த்து வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக நடைபெற்ற பா.ஜ.க. கூட்டணி கூட்டத்தில் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. முடிவு அறிவிப்பதை பா.ஜ.க. கூட்டணி தள்ளி வைத்துள்ளது. இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ் தரப்பில் இருந்து கலாமுக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத் தக்கதாகும். திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி ஏற்கனவே கலாமுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகிறார். ஆனால் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக கலாம் இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago