முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உங்கள் வீட்டுத் திருமணம்போல் அனைத்து வசதிகளையும் அரசு செய்துள்ளது

செவ்வாய்க்கிழமை, 19 ஜூன் 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஜூன்.- 19 - சென்னையில் நேற்று நடந்த 1006 திருமணங்களை முன்னின்று நடத்திவைத்த முதல்வர் ஜெயலலிதா அரசு செய்துள்ள ஏற்பாடுகள் குறித்து பட்டியலிட்டு பெருமிதமாகக் கூறினார். கல்யாணம் பண்ணுவது என்பது அவ்வளவு எளிதல்ல என்பதை உணர்த்தவே கல்யாணம் பண்ணிப்பார்; வீட்டைக் கட்டிப்பார் என்ற பழமொழியை நம் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள். இதனை உணர்ந்த நமது இதயதெய்வம் எம்.ஜி.ஆர்.  1982 ஆம் ஆண்டு இலவசத் திருமணத் திட்டத்தை கொண்டு வந்தார். 1991 முதல் 1996 வரை நான் முதலமைச்சராக இருந்த போது, அ.தி.மு.க. சார்பில் சிதம்பரத்தில் 2,500 திருமணங்களையும், திருச்சியில் 5,004 திருமணங்களையும் நடத்திக் காட்டினோம். இரண்டாவது முறையாக நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, இந்துசமய அறநிலையத் துறையின் சார்பில் 2002 ஆம் ஆண்டு 1,008 திருமணங்களையும்; 2003​ஆம் ஆண்டு 1,053 திருமணங்களையும் இதே திருவேற்காட்டில் நான் நடத்தி வைத்தேன்.  மூன்றாவது முறையாக முதலமைச்சராக நான் பொறுப்பேற்றவுடன், திருமண வயதை தாண்டியும் திருமணம் செய்ய முடியாமல் ஏழை, எளிய பெண்கள் வாடிக் கொண்டிருப்பதைக் கருத்தில் கொண்டு, ஏழைப் பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் திருமண நிதி உதவித் தொகையான 25,000 ரூபாயுடன் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்கம் வழங்க உத்தரவிட்டேன். பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில்,  பட்டம் அல்லது பட்டயப் படிப்பு படித்த பெண்களுக்கு திருமண உதவித் தொகையை 50,000 ரூபாயாக உயர்த்தி வழங்கியதோடு, 4 கிராம் தங்கம் வழங்கவும், ஆணையிட்டேன். இது மட்டுமல்லாமல், மகப்பேறு காலத்தில் வழங்கப்படும் நிதி உதவியை 12,000 ரூபாய் என இரட்டிப்பாக்கி வழங்கியுள்ளேன். இன்று நடைபெற்ற திருமணங்கள் சாதி பேதமின்றி ஒரே இடத்தில் நடைபெற்ற சமத்துவ திருமணங்கள். இன்று, 11 மாற்றுத் திறனாளிகள் உட்பட ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த 611 ஜோடிகளுக்கும்; பழங்குடியினத்தைச் சார்ந்த 34 ஜோடிகளுக்கும்; மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 183 ஜோடிகளுக்கும்; பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 132 ஜோடிகளுக்கும்; இதர வகுப்பைச் சேர்ந்த 46 ஜோடிகளுக்கும் திருமணம் இனிதே நடந்தேறியுள்ளது.  இன்று திருமணம் நடந்தேறியுள்ள புதுமணத் தம்பதிகளுக்கு 4 கிராம் தங்க திருமாங்கல்யம்; 6 கிராம் எடையுள்ள 4 வெள்ளி மெட்டிகள்; முகூர்த்தப் புடவை; ரவிக்கை; ஜரிகை வேட்டி; ஜரிகை துண்டு; சட்டை; உள்ளிட்ட  28 வகையான சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இந்த அரசு செய்துள்ளதோடு மட்டுமல்லாமல், வெளி மாவட்டங்களைச் சார்ந்த மணமக்கள் மற்றும் அவர்தம் உறவினர்களுக்கான போக்குவரத்து வசதி, மணமக்கள் மற்றும் உறவினர்களுக்கான தங்கும் வசதி; அவர்களுக்குத் தேவையான உணவு, குடிநீnullர் மற்றும் கழிவறை வசதிகள் ஆகியவையும் செய்து தரப்பட்டுள்ளன. கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி  ஆகிய தொலைதூர மாவட்டங்களைச் சேர்ந்த மணமக்கள் மற்றும் அவர்தம் உறவினர்கள் இரவு பயணத்தை தவிர்த்திடும் வகையில் திருச்சியில் 16​ஆம் தேதி இரவு தங்க வைக்கப்பட்டு, பின்னர் இங்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். 19 திருமண மண்டபங்களில் மணமக்கள் மற்றும் அவர்தம் உறவினர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இது மட்டுமல்லாமல், மணப்பந்தலில் அமர்ந்திருப்பவர்களும், பந்தலுக்கு வெளியே இருப்பவர்களும் நிகழ்ச்சியை கண்டுகளிக்கும் வகையில் தொலைக்காட்சி பெட்டிகள் பொருத்தப்பட்டு உள்ளன.   இந்தத் திருமண விழா முடிந்தவுடன், அவர்களுக்கு சிறப்பான திருமண விருந்து வழங்கிடவும், மணமக்கள் சீர்வரிசை பொருட்களுடன் அவர்கள் பயணித்து வந்த பேருந்துகள் மூலம் சொந்த ஊர்களுக்கு செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மொத்தத்தில், உங்கள் வீட்டு திருமணம் போல் அனைத்து வசதிகளையும் எனது தலைமையிலான அரசு செய்துள்ளது.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்