முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீனாட்சி அம்மன் கோவில் ஆனி ஊஞ்சல் உற்சவவிழா

செவ்வாய்க்கிழமை, 19 ஜூன் 2012      ஆன்மிகம்
Image Unavailable

மதுரை,ஜூன்.- 19 - மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆனி உற்சவ விழா வருகிற 24ம் தேதி துவங்குகிறது.   மதுரை மீனாட்சி அம்மன் கோவில் முக்கிய திருவிழாக்களில் ஆனி உற்சவ விழாவும் ஒன்று. இந்த திருவிழா வருகிற 24 ம் தேதி துவங்கி ஜூலை2ம் தேதி வரை நடைபெறுகிறது. 25ம் தேதி அதிகாலை 3 மணியளவில் ஆனி உத்திர திருமஞ்சன நிகழ்ச்சி நடக்கிறது. அப்போது பஞ்ச சபை கால்மாறி ஆடிய நடராஜர், சிவகாமி அம்மனுக்கு அபிஷேகம்  மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்த பூஜைக்கு அபிஷேக பொருட்கள், பூஜை பொருட்களை பக்தர்கள் வழங்க கோவில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.    ஜூலை 2ம் தேதி ஆனி முப்பழ பூஜையன்று இரவு சுவாமி வெள்ளிக்குதிரை வாகனத்திலும், அம்மன் மர சிம்மாசனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார்கள். எனவே வருகிற 24ம் தேதி முதல் ஜூலை 3ம் தேதிவரை இந்த திருக்கோவிலின் சார்பாக உபய திருக்கல்யாணம், தங்கரதம், வைர கிரீடம், தங்ககவசம் ஆகியவை பதிவு செய்யப்பட மாட்டாது என கோவில் இணை ஆணையர் ஜெயராமன் தெரிவித்துள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!