முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனாதிபதி தேர்தல்: நாளை நல்ல முடிவு எடுக்கப்படும்

புதன்கிழமை, 20 ஜூன் 2012      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, ஜூன். - 20 - கருத்தொற்றுமை அடிப்படையில் ஜனாதிபதியை தேர்வு செய்வதே ஜனநாயகத்துக்கு நல்லது. இடதுசாரிகளிடையே நாளை(வியாழக்கிழமை) நல்ல முடிவு எடுக்கப்படும் என்று டி. ராஜா கூறியுள்ளார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலர் டி. ராஜா டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ஜனாதிபதி தேர்தல் குறித்து நான்கு இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் டெல்லியில் கூடி நாளை விவாதிக்கின்றனர். அப்போது யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது பற்றி முடிவு செய்யப்படும். ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளரான பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங் ஏற்கனவே கட்சியின் மூத்த தலைவர் ஏ.பி. பரதனை தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். அதே போல் பி.ஏ. சங்மாவை ஆதரிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் கேட்டுக் கொண்டார். இவை குறித்து நாளை கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
பிரணாப் முகர்ஜிக்கு நீண்ட அரசியல் அனுபவம் உள்ளது. பல்வேறு துறைகளில் அமைச்சராகவும் இருந்துள்ளார். பி.ஏ. சங்மாவும் மத்திய அமைச்சர், மக்களவை தலைவர் போன்ற முக்கிய பொறுப்புகளை வகித்தவர். வடகிழக்கு பகுதியை சேர்ந்த பழங்குடியின மக்களின் பிரதிநிதியாகவும் அவர் திகழ்கிறார். அதனால் இருவருக்கும் உள்ள வெற்றி வாய்ப்பு குறித்து இடதுசாரி தலைவர்கள் விவாதிப்பர். ஆனால் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது பற்றி இதுவரை முடிவு செய்யவில்லை. தற்போதுள்ள சூழ்நிலையில் கருத்தொற்றுமையுடன் ஜனாதிபதியை ஒருமனதாக தேர்வு செய்ய வேண்டும். அதுதான் ஜனநாயகத்துக்கு நல்லது. பா.ஜ.க.வில் நிலவுவது போல் இடதுசாரி கட்சிகளிடையே குழப்பம் இல்லை. ஆனால் நல்ல முடிவை வெள்ளிக் கிழமை எடுப்போம் என்றார் அவர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்