முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் வேட்பாளர் மத சார்பற்றவராக இருக்கவேண்டும்

புதன்கிழமை, 20 ஜூன் 2012      இந்தியா
Image Unavailable

பாட்னா, ஜுன் - 20 - தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் மதச்சார்பற்ற நற்சான்று பெற்றவராக இருக்க வேண்டும் என்று பீகார் முதல்வர் நிதீஷ் குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  இது பா.ஜ.க., ஐக்கிய ஜனதா தளம் உறவில் ஒரு புதிய மோதலை ஏற்படுத்தியுள்ளது. அடுத்து நடைபெறக்கூடிய பாராளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை நிறுத்தலாம் என்று பேச்சு அடிபட்டு வருகிறது. இந்த நிலையில் பீகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் தலைவர்களில் ஒருவருமான நிதீஷ் குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் மதச்சார்பற்ற நற்சான்று பெற்ற ஒருவராக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். அதாவது நரேந்திர மோடியாக  இருக்கக்கூடாது என்பதை அவர் மறைமுகமாக சுட்டிக்காட்டினார். ஏற்கனவே ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு தொடர்பாக பா.ஜ.க.வுக்கும் ஐக்கிய ஜனதா தளத்திற்கும் இடையே  கருத்து வேறுபாடு ஏற்பட்டிருந்த நிலையில் இப்போது பிரதமர் வேட்பாளர் குறித்து ஒரு கருத்தை சொல்லி புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார் நிதீஷ் குமார். மதசார்பற்ற பிரதமர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என்ற நிதீஷ்குமாரின் இந்த கருத்துக்கு பா.ஜ.க.வைச் சேர்ந்த பீகார் பா.ஜ.க. அமைச்சர் கிரிராஜ் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  தங்களுடைய வசதிக்கேற்ப மதசார்பின்மை என்ற தொப்பியை அணிந்துகொண்டு இவர்கள் போலி மதசார்பின்மையை பேசுகிறார்கள். போலி தலைவர்கள் என்று பீகார் முதல்வர் நிதீஷ் குமாரையே அவர் இப்படி மறைமுகமாக தாக்கியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்